tamilkurinji logo
 

5-வது மாடியில் இருந்து குதித்து ஆயுள் தண்டனை கைதி தற்கொலை,Maharashtra: Man on furlough jumps to death at Mantralaya tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

Maharashtra:,Man,on,furlough,jumps,to,death,at,Mantralaya,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> இந்தியா

5-வது மாடியில் இருந்து குதித்து ஆயுள் தண்டனை கைதி தற்கொலை

First Published : Friday , 9th February 2018 07:06:23 PM
Last Updated : Friday , 9th February 2018 07:06:23 PM


5-வது மாடியில் இருந்து குதித்து ஆயுள் தண்டனை கைதி தற்கொலை,Maharashtra: Man on furlough jumps to death at Mantralaya tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

மந்திராலயா கட்டிடத்தின் 5-வது மாடியில் இருந்து குதித்து ஆயுள் தண்டனை கைதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மந்திராலயா கட்டிடத்தின் 5-வது மாடியில் இருந்து குதித்து ஆயுள் தண்டனை கைதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மராட்டிய அரசின் தலைமை செயலகமான மந்திராலயா மும்பை நரிமன்பாயிண்டில் உள்ளது. மாநில அரசின் செயல்பாடுகள் நடைபெறும் தலைமை செயலக கட்டிடம் தற்கொலை செய்து கொள்ளும் களமாக மாறி வருகிறது.

கடந்த மாதம் மந்திராலயாவில் தர்மா பாட்டீல் என்ற விவசாயி விஷம் குடித்தார். பின்னர் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

2 நாட்களுக்கு முன்னர் இங்கு அவினாஷ் என்ற வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு முன் மந்திராலயா கட்டிடத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறி இருக்கின்றன.

இந்தநிலையில், நேற்று மந்திராலயா கட்டிடத்தில் இருந்து கீழே குதித்து ஒருவர் உயிரை மாய்த்து கொண்டார். நேற்று மாலை மந்திராலயாவிற்கு வந்த அந்த நபர் 5-வது மாடிக்கு சென்றார். அடுத்த சில நொடிகளில் திடீரென கீழே குதித்துவிட்டார்.

இதில், அவர் படுகாயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் துடித்தார். இதை பார்த்து மந்திராலயா அதிகாரிகள், ஊழியர்கள் என அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து அவரை மீட்டனர். உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில், அவர் மும்பை செம்பூரை சேர்ந்த ஹர்ஷல் ராவ்தே (வயது 45) என்பது தெரியவந்தது.

இதற்கிடையே கல்வித்துறை மந்திரி வினோத் தாவ்டே, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் தனஞ்செய் முண்டே ஆகியோர், மந்திராலயா வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், ஹர்ஷல் ராவ்தே அவரது உறவுக்கார பெண்ணின் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறைக்கு சென்று, தற்போது பரோலில் வெளியே வந்துள்ளார்.

பரோல் விடுப்பை நீட்டிக்க கோரி மனு கொடுக்க மந்திராலயா வந்தபோது திடீரென ஏற்பட்ட விரக்தியால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

மந்திராலயா கட்டிடத்தில் இருந்து ஒருவர், கீழே குதித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

5-வது மாடியில் இருந்து குதித்து ஆயுள் தண்டனை கைதி தற்கொலை,Maharashtra: Man on furlough jumps to death at Mantralaya tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
5-வது மாடியில் இருந்து குதித்து ஆயுள் தண்டனை கைதி தற்கொலை,Maharashtra: Man on furlough jumps to death at Mantralaya tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
5-வது மாடியில் இருந்து குதித்து ஆயுள் தண்டனை கைதி தற்கொலை,Maharashtra: Man on furlough jumps to death at Mantralaya tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 நிரவ் மோடியின் ரூ.5,100 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் பறிமுதல்
குஜராத்தை சேர்ந்த வைர நகை வியாபாரியான நிரவ் மோடி உலகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் தனது நகை ஷோரூம்களை வைத்துள்ளார். இதற்கிடையே, பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் இருந்து சுமார் 11 ஆயிரத்து 400 கோடி ரூபாய் சட்டவிரோதமாக பரிமாற்றம்

மேலும்...

 லஞ்சம் வாங்கிய பணத்தை விழுங்கிய பெண் போலீஸ் அதிகாரி
 மகாராஷ்ட்ராவில் கோலாபூரின் சந்த்காத் காவல் நிலையத்தில் லஞ்ச பணத்தை பெண் போலீஸ் அதிகாரி விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.லஞ்ச ஒழிப்பு துறையிடம் இருந்து தப்பிக்க தான் வாங்கிய 300 ரூபாய் லஞ்ச பணத்தை வாயில் விழுங்க முயற்சி செய்த பெண்

மேலும்...

 ரூ.11,600 கோடி மோசடி: யார் இந்த நிரவ் மோடி
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.280 கோடி மோசடியும், ரூ.11 ஆயிரத்து 600 கோடி சட்டவிரோத பரிவர்த்தனையும் செய்த வகையில் இன்று நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படும் நபராக வைர வியாபாரி நிரவ் மோடி(வயது47) மாறியுள்ளார்.ரூ.11 ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் உடையவர்,

மேலும்...

 கர்ப்பிணிப் பெண் துண்டுதுண்டாக வெட்டி கொலை
ஐதராபாத்தில் கர்ப்பிணிப் பெண்ணை பளிங்குக் கல் வெட்டும் எந்திரத்தில் துண்டாக துண்டாக வெட்டி கொலை செய்தவர்களை நீண்ட விசாரணைக்கு பின் வீடியோவில் கிடைத்த வழுக்கைத் தலை காட்சி மூலம் போலீசார் கைது செய்தனர்.இது குறித்து ஐதராபாத் போலீஸ் ஆணையர் சந்தீப் ஷான்டில்யா

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in