tamilkurinji logo


 

26ம் தேதி தேரோட்டம் பங்குனி உத்திர திருவிழா பழநியில் கொடியேற்றம்,Palani Murugan Temple Panguni uthirathiruvizha

Palani,Murugan,Temple,Panguni,uthirathiruvizha




26ம் தேதி தேரோட்டம் பங்குனி உத்திர திருவிழா பழநியில் கொடியேற்றம்

First Published : Wednesday , 20th March 2013 07:18:46 PM
Last Updated : Wednesday , 20th March 2013 07:18:46 PM


26ம் தேதி தேரோட்டம் பங்குனி உத்திர திருவிழா பழநியில் கொடியேற்றம்,Palani Murugan Temple Panguni uthirathiruvizha

பழநி தண்டாயுதபாணி கோயில் பங்குனி உத்திர திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 26ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி நேற்று காலை 11.20 மணிக்கு மேல் 12 மணிக்குள் மிதுன லக்கினத்தில் திருஆவினன்குடி கோயிலில் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. புண்ணிய நதியிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள் கொண்ட கலசங்கள், வாத்தியப் பொருட்கள் ஆகியவற்றுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டன.

வேல், மயில், சேவல், வளர்பிறை நிலவு, சூரியன், மணி மற்றும் பூஜைப் பொருட்கள் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறத்தினாலான கொடி பக்தர்களின் அரோகரா கோஷங்கள் முழங்க கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் 25ம் தேதி நடைபெறுகிறது. பங்குனி உத்திர தேரோட்டம் 26ம் தேதி நடைபெறுகிறது.

அன்று முத்துகுமாரசாமி தீர்த்தவாரிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும். மாலை 4.35 மணிக்கு கிரிவீதிகளில் தேரோட்டமும் நடைபெறும்.விழாவை முன்னிட்டு 24ம் தேதியில் இருந்து 28ம் தேதி வரை தங்க ரதம் புறப்பாடு நிறுத்தப்பட்டுள்ளது.

26ம் தேதி தேரோட்டம் பங்குனி உத்திர திருவிழா பழநியில் கொடியேற்றம்,Palani Murugan Temple Panguni uthirathiruvizha 26ம் தேதி தேரோட்டம் பங்குனி உத்திர திருவிழா பழநியில் கொடியேற்றம்,Palani Murugan Temple Panguni uthirathiruvizha 26ம் தேதி தேரோட்டம் பங்குனி உத்திர திருவிழா பழநியில் கொடியேற்றம்,Palani Murugan Temple Panguni uthirathiruvizha
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.திருச்செந்தூர் முருகன் கோயிலின் தலபுராணப்படி, சூரபத்மனை முருகப் பெருமான் வதம் செய்த இடம் என்பதால்

மேலும்...

 மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்
மதுரை சித்திரை திருவிழாவில் வேதமந்திரங்கள் முழங்க மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நேற்று கோலாகலமாக நடந்தது. இன்று காலை நான்கு மாசிவீதிகளில் தோரோட்டம் நடைபெறுகிறது.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்.14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று  முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணத்திற்காக

மேலும்...

 சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் நடை 10 மணி நேரம் அடைக்கப்படும்
சந்திர கிரகணத்தை முன்னிட்டு வரும் 25ம் தேதி 10 மணி நேரம் ஏழுமலையான் கோயில் நடை  மூடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.திருப்பதி திருமலை தேவஸ்தானம் மற்றும் ஏராளமான கோயில்களில் சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் நடக்கும்போது கோயில் நடை சாத்தப்படுவது

மேலும்...

 அகஸ்தீஸ்வரர் கோவிலில் லிங்கம் மீது சூரியஒளி விழும் அதிசயம்
விண்ணம்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவிலில் லிங்கம் மீது சூரிய ஒளி விழுந்தது. அப்போது பக்தர்கள் ‘நமச்சிவாய’ என்று கோஷமிட்டனர்.வேலூர் மாவட்டம், சேர்க்காடு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கும், வள்ளிமலை கோவிலுக்கும் மத்தியில் அமைந்துள்ளது விண்ணம்பள்ளி கிராமம். இந்த கிராமத்தில் தான் 12–வது நூற்றாண்டில் சோழர் காலத்தில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in