tamilkurinji logo


 

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லாது என்று தீர்ப்பு கூறிய நீதிபதிக்கு கொலை மிரட்டல்,18 TN MLA disqualification: Justice Sathyanarayanan tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema Justice M Sundar receives threat over split verdict in AIADMK MLAs disqualification case

18,TN,MLA,disqualification:,Justice,Sathyanarayanan,tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,Justice,M,Sundar,receives,threat,over,split,verdict,in,AIADMK,MLAs,disqualification,case




செய்திகள் >>> தமிழகம்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லாது என்று தீர்ப்பு கூறிய நீதிபதிக்கு கொலை மிரட்டல்

First Published : Monday , 9th July 2018 10:53:36 AM
Last Updated : Monday , 9th July 2018 10:53:36 AM


18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லாது என்று தீர்ப்பு கூறிய நீதிபதிக்கு கொலை மிரட்டல்,18 TN MLA disqualification: Justice Sathyanarayanan tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema Justice M Sundar receives threat over split verdict in AIADMK MLAs disqualification case

முதல்-அமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்கக்கோரி டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கவர்னரை சந்தித்து மனு கொடுத்தனர்.

அவர்களில் ஜக்கையன் எம்.எல்.ஏ. மட்டும் சபாநாயகர் ப.தனபாலை சந்தித்து விளக்கம் அளித்தார். இதைத் தொடர்ந்து மற்ற 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். அந்த 18 பேரும், சபாநாயகரின் முடிவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

இந்த வழக்கில் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி 18 எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரால் தகுதிநீக்கப்பட்டது செல்லும் என்று தீர்ப்பு வழங்கினார். மற்றொரு நீதிபதியான எம்.சுந்தர், 18 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று தீர்ப்பு வழங்கினார்.

நீதிபதிகளின் இந்த மாறுபட்ட தீர்ப்பால், தற்போது இந்த வழக்கை 3-வது நீதிபதி சத்தியநாராயணன் விசாரித்து வருகிறார்.

இந்த நிலையில், நீதிபதி சுந்தருக்கு மர்ம நபர் ஒருவர் மிரட்டல் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில், “18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகர் உத்தரவு செல்லாது என்று தீர்ப்பு அளித்த உன்னையும், உன் குடும்பத்தையும் கொலை செய்துவிடுவோம்” என்று எழுதப்பட்டு இருந்ததாக தெரிகிறது.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நீதிபதி சுந்தர், அந்த கடிதத்தை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, இந்த மிரட்டல் கடிதம் தொடர்பாக தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சென்னை நகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை தொடர்பு கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.


இதைத்தொடர்ந்து, சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்து இருக்கும் நீதிபதிகள் குடியிருப்பில் உள்ள நீதிபதி எம்.சுந்தரின் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் போலீசார் தடுப்பு வேலி அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.


18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லாது என்று தீர்ப்பு கூறிய நீதிபதிக்கு கொலை மிரட்டல்,18 TN MLA disqualification: Justice Sathyanarayanan tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema Justice M Sundar receives threat over split verdict in AIADMK MLAs disqualification case 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லாது என்று தீர்ப்பு கூறிய நீதிபதிக்கு கொலை மிரட்டல்,18 TN MLA disqualification: Justice Sathyanarayanan tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema Justice M Sundar receives threat over split verdict in AIADMK MLAs disqualification case 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லாது என்று தீர்ப்பு கூறிய நீதிபதிக்கு கொலை மிரட்டல்,18 TN MLA disqualification: Justice Sathyanarayanan tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema Justice M Sundar receives threat over split verdict in AIADMK MLAs disqualification case
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வட தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
வட தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் கடந்த மூன்று தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில்

மேலும்...

 பள்ளி மாணவனை திருமணம் செய்த கல்லூரி மாணவி கைது
திருவண்ணாமலை மாவட்டம் கெங்கல மகாதேவி பகுதியை சேர்ந்த இளம்பெண் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னுடைய மகளை மீட்டுத் தருமாறும் இளம்பெண்ணின் பெற்றோர் திருவண்ணாமலை

மேலும்...

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
தமிழகம் மற்றம் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாகவே பரவலாக லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அடுத்து வரும் தினங்களிலும் வட

மேலும்...

 நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் அபாயம்
நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை நிலவுவதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் நிலக்கரி பற்றாக்குறைக்கு தமிழக அரசின் கமிஷன் பெறும் உள்நோக்கம் காரணமாக இருக்கலாம் என்று

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in