tamilkurinji logo


 

திருமணமான 5 நாளில் கணவரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய இளம்பெண்,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,,




செய்திகள் >>> தமிழகம்

திருமணமான 5 நாளில் கணவரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய இளம்பெண்

First Published : Thursday , 19th July 2018 07:48:06 PM
Last Updated : Thursday , 19th July 2018 07:48:06 PM


திருமணமான 5 நாளில் கணவரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய இளம்பெண்,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

மற்ற பெண்களுடன் உள்ள தொடர்பை மறைத்துத் திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரமடைந்த மனைவி, கணவனை பட்டப்பகலில் கோயில் வளாகத்தில் வைத்துத் தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கோவை சாய்பாபா கோயிலுக்கு நேற்று சாமி தரிசனம் செய்ய புதுமணத் தம்பதிகள் வந்தனர். அப்போது கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கணவனை அந்த இளம்பெண் சரமாரியாகத் தாக்கினார். கையை முறுக்கி முகத்தில் குத்தியபடி திட்டிக் கொண்டிருந்தார்.

அடிவாங்கியபடி எதிர்க்க முடியாமல் அந்த இளைஞர் அழுதுகொண்டிருந்தார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சிரித்தபடி சென்றனர். சிலர் செல்போனில் படம் எடுத்தனர். சிலர் தடுக்க முயன்றபோது இளம்பெண் கூறிய காரணத்தைக் கேட்டு “போடு இன்னும் ரெண்டு போடு” என்று இளம்பெண்ணுக்கு ஆதரவாகப் பேசிவிட்டுச் சென்றனர்.

கணவரைத் தாக்கிய இளம்பெண் ஐந்து நாட்களுக்கு முன்னர் தனது வீட்டார் எதிர்ப்பையும் மீறி தனது காதலரைக் கரம் பிடித்துள்ளார். அந்த மகிழ்ச்சியில் 5 நாள் மண வாழ்க்கை வாழ்ந்த தம்பதியர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். அப்போது கணவரின் கையில் வேறொரு பெண்ணின் பெயர் பச்சை குத்தியிருப்பதை புது மணப் பெண் கவனித்திருக்கிறார்.

அது பற்றிக் கேட்டபோது கணவர் மறைத்துள்ளார். தனக்கு ஏற்கெனவே திருமணமாகி மனைவி பிரிந்துசென்று விட்டார் என்கிற தகவலைக் கூறியுள்ளார்.

முதல் திருமணத்தை மறைத்து தன்னிடம் பழகி ஏமாற்றியதை அந்த இளம்பெண்ணால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால் கோபமான அப்பெண் இடத்தில் பொது இடம் என்றும் பாராமல் கணவனை சரமாரியாக அடித்து வெளுத்துவிட்டார்.

மனைவியிடம் அடிவாங்கி அழுத இளைஞர் மூன்று பெண்களைக் காதலித்ததும், அவர்களில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்ததும் பின்னர் தெரியவந்துள்ளது.

இதனிடையே பொது இடத்தில் இளம்பெண் ஒருவர் இளைஞரை அடிப்பதாக போலீஸாருக்கு சிலர் போன் செய்து தகவல் சொல்ல சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் இளம்பெண் தாக்குதலிலிருந்து அழுதுகொண்டிருந்த இளைஞரை மீட்டனர்.

“என்ன செய்ததால் அந்தப் பெண் உன்னை இந்த அடி அடிக்குது” என்று போலீஸார் கேட்க “நான் என்ன சார் செய்தேன், அவள் என் மனைவி அவள்தான் என்னைப் போட்டு இந்த அடி அடிக்கிறார்” என்று கூறிய கணவன் “நல்லவேளை சார் வந்து காப்பாற்றினீர்கள்” என்று கூறியுள்ளார்.

“ஏம்மா புருஷனைப் போட்டு அடிப்பதை எல்லாம் வீட்டுக்குள் வைத்துக்கொள். பொது இடத்தில் இவ்வாறு செய்யக்கூடாது. அவன் என்ன தவறு செய்தான்” என்று போலீஸார் கேட்டுள்ளனர்.

“ என்னை ஏமாற்றித் திருமணம் செய்துகொண்டார். அவருக்கு இரண்டு பெண்களுடன் பழக்கம் உள்ளது, ஏற்கெனவே திருமணமாகி மனைவியும் இருக்கிறார்” என்று இளம்பெண் கூற, ஏதாவது புகார் இருந்தால் ஸ்டேஷனில் சொல்ல வேண்டும், சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது என்று போலீஸார் எச்சரித்து இருவரையும் அனுப்பி வைத்தனர்.

திருமணமான 5 நாளில் கணவரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய இளம்பெண்,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema  திருமணமான 5 நாளில் கணவரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய இளம்பெண்,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema  திருமணமான 5 நாளில் கணவரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய இளம்பெண்,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது: சைதாப்பேட்டை நீதிமன்றம்
தேச விரோத செயலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது என்று சைதாப்பேட்டை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சென்னையைச் சேர்ந்த திருமுருகன் காந்தி. இவர் ஜெனீவாவில் அண்மையில் நடைபெற்ற ஐ.நா.வின் மனித

மேலும்...

 ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ - சந்தனபெட்டியின் மீது வாசகம்
ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ என கருணாநிதி உடல் வைக்கப்பட்ட சந்தனபெட்டியின் மீது வாசகம் எழுதப்பட்டுள்ளது.5 முறை தமிழக முதல் அமைச்சராகவும் 50 ஆண்டு காலம் திமுக தலைவருமாக இருந்தவருமான கலைஞர் கருணாநிதி நேற்று (ஆகஸ்ட் 7) காலமானார். இந்திய

மேலும்...

 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் அடக்கம்
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நல குறைவால் நேற்று(செவ்வாய்க்கிழமை) மாலை காலமானார். அவருக்கு வயது 95. இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு, ஜனாதிபதி,

மேலும்...

 முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார்
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த கருணாநிதி சென்னையில் காலமானார். 95 வயதான கலைஞர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். 25ம் தேதி உடல்நிலை சரியில்லாமல்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in