tamilkurinji logo


 

திருவண்ணாமலையில் உள்வட்ட பாதையில் கிரிவலம் செல்ல தடை,




திருவண்ணாமலையில் உள்வட்ட பாதையில் கிரிவலம் செல்ல தடை

First Published : Thursday , 9th August 2012 08:33:31 PM
Last Updated : Thursday , 9th August 2012 08:33:31 PM


திருவண்ணாமலையில் உள்வட்ட பாதையில் கிரிவலம் செல்ல தடை,

திருவண்ணாமலை கிரிவலம் மிகவும் பிரசித்தி பெற்றது. மகாதீபம் ஏற்றப்படும் 2,668 அடி உயர மலையைச் சுற்றிலும், 14 கி.மீ. தூரத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் நடந்து கிரிவலம் செல்கின்றனர். மேலும், மலையையொட்டி வனப்பகுதிக்குள் அமைந்துள்ள ஒற்றையடி பாதையான உள்வட்ட பாதை வழியாகவும் பக்தர்கள் கிரிவலம் செல்வதும் வழக் கம். உள்வட்டப் பாதை அமைந்துள்ள பகுதி முழுவதும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காப்புக்காடு (ரிசர்வ் பாரஸ்ட்) பகுதியாகும்.

இந்நிலையில், உள்வட்ட பாதை வழியாக பக்தர்கள் கிரிவலம் செல்ல வும், காப்புக்காடு பகுதிகளுக்குள் பொதுமக்கள் செல்லவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இது தொடர்பாக, திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் வீ.நாகநாதன் அளித்த பேட்டி:

திருவண்ணாமலை மலையை சுயம்பு வடிவான சிவனாக பக்தர்கள் வழிபடுகின்றனர். எனவே, மலை யின் புனிதத்தையும், வளத்தையும், பசுமையையும் பாதுகாப்பதும், மனிதர் களால் மலைக்கு ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதும் அவசியம். மலை யின் இயற்கை சூழலை பாதுகாப்பதுதான் உண்மையான ஆனமிகம். எனவே, உள்வட்ட பாதை வழியாக கிரிவலம் செல்வதற்கும், காப்புக்காடு பகுதிக்குள் ஆட்கள் நுழைவதற்கும் தடை விதித்திருக் கிறோம்.

காப்புக்காடு பகுதிக்குள் நுழைவது சட்டப்படி தவறு. கிரிவலப்பாதையில் 50 இடங்களில் ‘தடைச் செய்யப்பட்ட காப்புக்காடு பகுதி, மீறினால் தண்டனை‘ என்ற வாசகங்கள் அடங்கிய எச்சரிக்கை போர்டுகள் விரைவில் வைக்கப்படும். தடையை மீறி உள்வட்ட கிரிவலப்பாதையிலும், காப்புக்காடு பகுதியிலும் செல்வோருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

திருவண்ணாமலையில் உள்வட்ட பாதையில் கிரிவலம் செல்ல தடை, திருவண்ணாமலையில் உள்வட்ட பாதையில் கிரிவலம் செல்ல தடை, திருவண்ணாமலையில் உள்வட்ட பாதையில் கிரிவலம் செல்ல தடை,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மகாளய அமாவாசை -பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு
ஒவ்வொரு புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும்  புனிதமான அமாவாசை ஆகும். தட்சனாயத்தில் வரும் முதல் அமாவாசையான  ஆடி அமாவாசை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதைவிட பல மடங்கு முக்கியத்துவம் பெறும் அமாவாசை புரட்டாசி அமாவாசை ஆகும். இந்த அமாவாசை நாள்

மேலும்...

 திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு
இந்த மாதம் பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.அதன் விவரம் வருமாறு:–இந்த மாதத்திற்கான பவுர்ணமி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4.45 மணிக்கு தொடங்கி நாளை (புதன்கிழமை) மாலை 3.55 மணி வரை உள்ளது. இந்த

மேலும்...

 தை அமாவாசையின் சிறப்பு!!
ஒவ்வொரு அமாவாசையிலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறந்தது. இருந்தாலும், தை அமாவாசை தினத்தில் பிதுர் தர்ப்பணம் கொடுப்பது மிகவும் சிறப்பு. எனவேதான் உத்தராயணப் புண்ணிய காலத்தில் வரும் தை அமாவாசை பிதுர் வழிபாட்டிற்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் புனிதமான கடற்கரையிலோ,

மேலும்...

 மகரவிளக்கு பூஜை - சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை திருவிழா மற்றும் மகர விளக்கு பூஜை திருவிழாக்கள் மிகவும் பிரசித்திபெற்றவை. இந்த திருவிழா நாட்களில் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in