“ஆடியோவில் இருப்பது எனது குரல் அல்ல; வழக்கு தொடருவேன்”அமைச்சர் ஜெயக்குமார்

 “ஆடியோவில் இருப்பது எனது குரல் அல்ல; வழக்கு தொடருவேன்”அமைச்சர் ஜெயக்குமார்

மீடூ’ விவகாரம் ஏற்கனவே நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் இளம்பெண் ஒருவருடன் தொடர்பு வைத்திருப்பதாகவும், அவரது கருக்கலைப்பு தொடர்பாக அந்த பெண்ணின் தாயாருடன் அவர் பேசும் ஆடியோ இது தான் என்றும் சமூக வலைதளங்களில் நேற்று ஒலிநாடா ஒன்று பரபரப்பாக சுற்றி வந்தது.

 
ஆனால், இதை அமைச்சர் டி.ஜெயக்குமார் திட்டவட்டமாக மறுத்தார். இந்த விஷயம் தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சிகலா மற்றும் டி.டி.வி.தினகரனை நான் கடுமையாக எதிர்க்கும் காரணத்தினால் என் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு எப்படியாவது களங்கம் கற்பிக்கவேண்டும் என்ற வகையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பாகவே ஒரு நட்சத்திர ஓட்டலில் நான் யாருடனோ இருப்பது போன்று போலியான புகைப்படத்தை வாட்ஸ்-அப்பில் வெளியிட்டார்கள். பேஸ்புக் சமூக வலைத்தளத்திலும் பரப்பினார்கள். அது உடனடியாக என் கவனத்துக்கு வந்து, சைபர் கிரைமில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அதோடு அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

அதில் தோல்வியடைந்தவர்கள் அந்த குடும்பத்தை நான் முழுமையாக எதிர்க்கின்ற காரணத்தால், என்னை நேரடியாக எதிர்க்கின்ற திராணி இல்லாதவர்கள், ஒரு ஆடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். இப்போது தொழில்நுட்பம் எப்படி வளர்ச்சியடைந்திருக்கிறது என்று உங்களுக்கே தெரியும். வீடியோவிலேயே போலியான ஆள் ஒருவர் இருப்பது போன்று செய்யலாம். ஆடியோவிலும் போலியாக பேசுவது போன்று செய்யலாம். அப்படி ஆடியோவை போலியாக சித்தரித்து வாட்ஸ்-அப்பில் பரப்பியிருக்கிறார்கள். இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

இதன் பின்னணியில் யார், யாரெல்லாம் இருக்கிறார்களோ, அவர்கள் சட்டத்தின் முன் பதில் சொல்லவேண்டியவர்கள். எனவே, சட்டப்படி அதனை எதிர்கொள்வதற்கு நானும் தயாராக இருக்கிறேன். வாட்ஸ்-அப், பேஸ்புக்கில் போட்டவர்கள் நிச்சயம் அந்த கும்பல் தான். தனியார் தொலைக்காட்சிக்கு நேர்காணல் கொடுக்கும்போது என்னிடம் ஒரு ஆடியோ இருக்கிறது என்று அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். போலியாக தயாரித்திருக்கிறார்கள். மிகவும் கெட்டிக்காரர்கள்.

அந்த கூட்டமே ஒரு மோசடி மற்றும் ஏமாற்றும் கூட்டம். அப்படி இருக்கும்போது இது அவர்களுக்கு கைவந்த கலை. இதற்கு எல்லாம் அஞ்சுகிறவர்கள் நாங்கள் அல்ல. சிங்கங்கள். எதையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். சட்டத்தின் மூலம் நாங்கள் எதிர்கொள்வோம். அதற்கு அவர் பதில் சொல்லியே ஆகவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


https://goo.gl/4Eu1bs






18 Dec 2018

வீடு கட்ட லஞ்சம் கொடுக்க வேண்டுமா?- அதிகாரியிடம் போனில் பேசிய கமல்

14 Dec 2018

நான் உழைத்து முதல்வரானேன்: நீங்கள் அப்பாவின் தயவால் உயர்ந்துள்ளீர்கள்: ஸ்டாலின்மீது எடப்பாடி பாய்ச்சல்

14 Dec 2018

புயலால் 8 மீட்டர் வரை அலை எழும்பும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

14 Dec 2018

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்

13 Dec 2018

பள்ளியில் 5 மாணவிகள் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி

13 Dec 2018

கழிவறை கேட்டு தந்தை மீது புகார் தந்த 7 வயது சிறுமி.. ஆம்பூர் தூய்மை இந்தியா தூதுவரானார்

13 Dec 2018

காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் : வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு

13 Dec 2018

தினகரனை தவிர பிரிந்து சென்றவர்கள் யார் வேண்டுமானாலும் திரும்பி வரலாம் - முதல்வர் பகிரங்க அழைப்பு

11 Dec 2018

குடும்ப வறுமையில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை

11 Dec 2018

கூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு: கல்லூரி மாணவி பரிதாப மரணம்