tamilkurinji logo


 

ஸ்ரீரங்கத்தில் நாளை சொர்க்கவாசல் திறப்பு,Srirangam temple sorkavasal open tomorrow

Srirangam,temple,sorkavasal,open,tomorrow




ஸ்ரீரங்கத்தில் நாளை சொர்க்கவாசல் திறப்பு

First Published : Saturday , 22nd December 2012 08:46:59 PM
Last Updated : Saturday , 22nd December 2012 08:46:59 PM


ஸ்ரீரங்கத்தில் நாளை சொர்க்கவாசல் திறப்பு,Srirangam temple sorkavasal open tomorrow

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் முக்கிய திருநாளான சொர்க்கவாசல் திறப்பு நாளை அதிகாலை 4.45 மணிக்கு நடைபெறுகிறது.

108 திவ்ய தேசங்களில் முதன்மையானது, பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடைபெறும் திரு அத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு இத்திருவிழா கடந்த 13ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.

ஜனவரி 3ம் தேதி வரை பகல்பத்து, ராப்பத்து என 21 நாட்கள் விழா நடைபெற உள்ளது.பகல்பத்து கடந்த 14ம் தேதி துவங்கி இன்று வரை நடைபெறுகிறது. நாளை (24ம் தேதி) ராப்பத்து துவங்குகிறது. முதல் நாளான நாளை அதிகாலை 3.15 மணிக்கு திருப்பள்ளி எழுச்சிபாடல் பாடப்படும். தொடர்ந்து  ரத்தின அங்கி, கிளிமாலை, பாண்டியன் கொண்டை அலங்காரத்துடன் மூலஸ்தானத்தில் இருந்து அதிகாலை 3.45 மணிக்கு விருச்சிக லக்னத்தில் சிம்மகதியில் பெருமாள் புறப்படுகிறார். அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும்.

பக்தர்கள் வெள்ளத்தில் பெருமாள் பரமபத வாசலை கடந்து திருக்கொட்டகையில்  பிரவேசிப்பார். சொக்கவாசல் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக 11 எஸ்பிக்கள் உள்ளிட்ட 4 ஆயிரம் போலீசார் ஸ்ரீரங்கம் வரவழைக்கப்பட்டுள்ளனர்.



ஸ்ரீரங்கத்தில் நாளை சொர்க்கவாசல் திறப்பு,Srirangam temple sorkavasal open tomorrow ஸ்ரீரங்கத்தில் நாளை சொர்க்கவாசல் திறப்பு,Srirangam temple sorkavasal open tomorrow ஸ்ரீரங்கத்தில் நாளை சொர்க்கவாசல் திறப்பு,Srirangam temple sorkavasal open tomorrow
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு
இந்த மாதம் பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.அதன் விவரம் வருமாறு:–இந்த மாதத்திற்கான பவுர்ணமி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4.45 மணிக்கு தொடங்கி நாளை (புதன்கிழமை) மாலை 3.55 மணி வரை உள்ளது. இந்த

மேலும்...

 சபரிமலையில் நாளை மகரவிளக்கு பூஜை
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜை நாளை நடைபெறுகிறது. மாலை 6.30க்கு பொன்னம்பலமேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவில் காட்சியளிக்கிறார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை குறிப்பிடத்தக்கதாகும். கடந்த மாதம் 26ம் தேதி மண்டல

மேலும்...

 தி.நகர் திருப்பதி தேவஸ்தானத்தில் நாளை அதிகாலை 2 மணி முதல் தரிசனம்
தி.நகர் திருப்பதி தேவஸ்தானத்தில் புத்தாண்டு தினத்தில் அதிகாலை 2 மணி முதல் இரவு 10.30 மணி வரை சுவாமி தரிசனம் செய்யலாம் என்றும் மாற்றுத்திறனாளிகள் உடனடியாக தரிசனம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தி.நகர் திருமலை திருப்பதி தேவஸ்தானம் உள்ளூர் ஆலோசனை குழு

மேலும்...

 மகரவிளக்கு பூஜை - சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை திருவிழா மற்றும் மகர விளக்கு பூஜை திருவிழாக்கள் மிகவும் பிரசித்திபெற்றவை. இந்த திருவிழா நாட்களில் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in