tamilkurinji logo


 

வி.ஐ.பி., தரிசன டிக்கெட் : திருமலையில் புதிய நிபந்தனை,




வி.ஐ.பி., தரிசன டிக்கெட் : திருமலையில் புதிய நிபந்தனை

First Published : Wednesday , 22nd September 2010 05:52:11 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


வி.ஐ.பி., தரிசன டிக்கெட் : திருமலையில் புதிய நிபந்தனை,

திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில், வி.ஐ.பி., தரிசன டிக்கெட் வழங்குவதில் கடுமையான நிபந்தனைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி பாஸ்கர் தெரிவித்தார்.

திருமலை கோவிலில் 500 ரூபாய் வி.ஐ.பி., கட்டண டிக்கெட்டில் சுவாமி தரிசனம் செய்ய மாநில அமைச்சர்கள், எம்.பி.,- எம்.எல்.ஏக்கள், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ் போன்ற உயர் அதிகாரிகள் திருப்பதி தேவஸ்தான போர்டு உறுப்பினர்கள், உயரதிகாரிகள் பரிந்துரை செய்து சிபாரிசு கடிதம் அளிக்க வேண்டும். அதன் பேரில் வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தான அதிகாரிகள் வழங்கி வந்தனர். இந்த நடைமுறையில் புரோக்கர்களின் தலையீடும், மேலும் இதர வழிகளில் ஊழலுக்கும் தொடர்பு இருந்து வந்தது. வி.ஐ.பி., டிக்கெட் வழங்குவதில் முறைகேடுகளை முழுமையாக தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, வி.ஐ.பி., டிக்கெட் மூலம் சாமி தரிசனம் செய்ய விரும்பும் தகுதியான பக்தர்கள், போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை (ஐ.டி.கார்டு) களை இணைத்து விண்ணப்பம் செய்ய வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்கும் பக்தர்களுக்கு மட்டுமே வி.ஐ.பி. டிக்கெட் வழங்க அதிகாரிகள் பரிந்துரை செய்யும் திட்டத்தை தேவஸ்தான நிர்வாகம் நேற்று முன்தினம் முதல் அமல்படுத்தியுள்ளது.

வி.ஐ.பி., டிக்கெட் பெற்ற பக்தர்கள் கோவிலுக்குள் வைகுண்டம் வழியாக செல்லும் போது, அவர் சரியான அடையாள அட்டை உள்ளவரா? என மீண்டும் பரிசீலனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். இங்கும் பக்தர்கள் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். வி.ஐ.பி., தரிசன வசதியை தகுதியானவர்கள் உபயோகப்படுத்தி கொள்கிறார்களா? அல்லது இத்திட்டம் வேறு திசையில் செல்கிறதா என்ற கோணத்திலும் தேவஸ்தான அதிகாரிகள் பரிசீலனை மேற்கொண்டுள்ளனர்.

வி.ஐ.பி., தரிசன டிக்கெட் : திருமலையில் புதிய நிபந்தனை, வி.ஐ.பி., தரிசன டிக்கெட் : திருமலையில் புதிய நிபந்தனை, வி.ஐ.பி., தரிசன டிக்கெட் : திருமலையில் புதிய நிபந்தனை,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.திருச்செந்தூர் முருகன் கோயிலின் தலபுராணப்படி, சூரபத்மனை முருகப் பெருமான் வதம் செய்த இடம் என்பதால்

மேலும்...

 மகாளய அமாவாசை -பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு
ஒவ்வொரு புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும்  புனிதமான அமாவாசை ஆகும். தட்சனாயத்தில் வரும் முதல் அமாவாசையான  ஆடி அமாவாசை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதைவிட பல மடங்கு முக்கியத்துவம் பெறும் அமாவாசை புரட்டாசி அமாவாசை ஆகும். இந்த அமாவாசை நாள்

மேலும்...

 அற்புத பலன் தரும் ஆடி அமாவாசை
மதாந்தோறும் வரும் அமாவாசை தினமானது இறந்த நமது முன்னோர்களுக்கு  விரதம் இருக்க ஏற்ற நாளாகும்இவற்றில் ஆடி அமாவாசை தை அமாவாசை மகாளய அமாவாசை  முக்கியமானவை.  முன்றில் ஆடி அமாவாசை மிகவும் விசேஷமானது.ஆடி மாதத்தில் (தமிழ் மாதம்) கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்;

மேலும்...

 மகிமை நிறைந்த மகாளய அமாவாசை
சூரியன் கன்னி ராசிக்குள் செல்லும்போது, அதாவது புரட்டாசி மாதம், எமதர்மராஜன் பிதுர்க்களை பூமிக்கு அனுப்புவதாக ஐதீகம். அந்த நேரத்தில் நமது முன்னோர்களும் இறந்து போன ரத்தசம்பந்த உறவுகளும் அந்தந்த உறவினரைகுடும்பத்தினரை காண ஆசையுடனும், மகிழ்ச்சியுடனும் நம்மை காணவருவார்கள். அந்த நேரத்தில் அவர்களை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in