வளர்த்தவரை கோடீஸ்வரராக மாற்றிய வேட்டை நாய்

வளர்த்தவரை கோடீஸ்வரராக மாற்றிய வேட்டை நாய்
சீனாவை சேர்ந்த ஒருவரை அவர் வளர்த்த வேட்டை நாய் கோடீஸ்வரராக மாற்றி இருக்கிறது. குயு கியூங்காய்(வயது 53) என்ற பெயருடைய அவர் வளர்ப்பு நாய்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் ஒரு திபெத்தியன் வேட்டை பெண் நாயை பரிசாக வழங்கினார். அதை இவர் தனது குழந்தையை போல பராமரித்து வந்தார். அதுபோலவே நாயும் தனது எஜமானருக்கு நன்றியுள்ளதாக இருக்கிறது.

சமீபத்தில் அந்த வேட்டை நாய் ஒரேநேரத்தில் 22 குட்டிகளை போட்டது. அதில் 5 குட்டிகள் இறந்து விட்டன. ஆனாலும் மற்ற 17 குட்டிகளும் நன்றாக இருக்கின்றன. இந்த திபெத்திய வேட்டை ரக நாய் உலகிலேயே அதிக விலைக்கு விற்பனையாவதாகும். அதாவது ஒரு குட்டி பல லட்சத்துக்கு விலை போகக்கூடியது. சமீபத்தில் சீனாவில் உள்ள ஷிஜிஹூயாங் என்ற இடத்தில் இந்த ரக நாய் ஒன்று சுமார் ரூ.6 கோடிக்கு ஏலம் போனது. 17 குட்டிகளை போட்டதன் மூலம் இந்த நாய் தனது உரிமையாளர் குயுவை பெரிய கோடீஸ்வரர் ஆக்கி விட்டது என்றே சொல்ல வேண்டும்.

பொதுவாக இந்தரக நாய் 7 அல்லது 8 குட்டிகளை தான் போடுவது வழக்கம். ஆனால் 22 குட்டிகளை ஈன்றிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது என்று சீன வேளாண்மை பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்ல உலக அளவில் அதிக குட்டிகளை ஈன்ற வளர்ப்பு நாய் பட்டியலில் 2-வது இடத்தையும் பெற்று விட்டது. இதற்கு முன்பு கேம்பிரிட்ஜ் பகுதியில் ஒரு நாய் 24 குட்டிகளை ஈன்றது தான் சாதனை ஆக இருக்கிறது.
https://goo.gl/NDoZSP


03 Aug 2018

1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்

11 Jul 2018

மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.

10 Jul 2018

தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு

06 Jul 2018

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா

02 Jul 2018

குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

24 Jun 2018

சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது

19 Jun 2018

காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்

18 Jun 2018

டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு

29 May 2018

முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை

20 Apr 2018

டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே