ப.சிதம்பரம் உறவினர் கொலையில் பல திடுக்கிடும் தகவல்கள்

ப.சிதம்பரம் உறவினர் கொலையில் பல திடுக்கிடும் தகவல்கள்
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மருமகன் மாயமான நிலையில், அவர் இன்று சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியான நளினியின் தங்கை பத்மினி. பத்மினியின் மகளான துர்கா வைஷ்ணவி திருப்பூரில் உள்ள சிவமூர்த்தி (47) என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.


தம்பதியருக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில், சிவமூர்த்தி ஊத்துக்குளி சாலை கருமாரம்பாளையத்தில் பின்னலாடை நிறுவனம் நடத்தி வந்தார்.


திருப்பூர் தொழிலதிபர் சிவமூர்த்தி கள்ளக்காதல் பிரச்சினையால் கொலை செய்யப்பட்டதாக கொலையாளிகள் வாக்குமூலம் அளித்தனர்.


கூலிப்படையினரை ஏவிவிட்ட மூர்த்தி என்பவரை போலீஸார் கைது செய்தனர்.


இவர் கோவை சென்று வருவதாக கடந்த 3 நாட்களுக்கு முன் சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன்களும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இ


தனால் பதறிய சிவமூர்த்தியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனிடையே ஆம்பூரில் சொகுசு கார் ஒன்று நீண்ட நேரமாக இருந்தது. அதன் அருகில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் 3 பேர் நின்றிருந்தனர்.

அப்போது ஆம்பூர் நெடுஞ்சாலை போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த கார் அருகே சென்றபோது அந்த 3 பேரும் தப்பி ஓட முயன்றனர். போலீஸார் எப்படியோ அவர்களை மடக்கிபிடித்தனர்.

விசாரணையில் சிவமூர்த்தியை கடந்த 3 நாட்களுக்கு முன்பு கடத்தியதாகவும் அவரை மேட்டுப்பாளையம் அருகே உள்ள வெள்ளியங்காட்டில் கொலை செய்துவிட்டு உடலை எங்கே வீசியெறிவது என்பது குறித்து தெரியாமல் சடலத்துடன் 2 நாட்களாக காரில் சுற்றி வந்ததாகவும் தெரிவித்தனர். சென்னை அடையாறு ஆற்றில் சடலத்தை வீச திட்டமிட்டு அது நடைபெறாததால் பெங்களூர் சென்றுள்ளனர்.

அப்போது அங்கு ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணையில் சடலத்தை டேப்பால் சுற்றி மைல்கல்லை வைத்து கட்டி வீசியுள்ளனர். இந்நிலையில் மைல்கல் சிறியதாக இருந்ததால் சடலம் மிதந்தது. இதுதொடர்பாக கோவையை சேர்ந்த மணிபாரதி, விமல், கவுதம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

3 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளனர். அதில் சிவமூர்த்தியின் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்ணுக்கும் சிவமூர்த்திக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது. இதை அந்த பெண்ணின் கணவர் மூர்த்தி தட்டி கேட்டும் இருவரும் கேட்கவில்லை.

இதனால் சிவமூர்த்தியை கொல்ல கூவி படைகளை ஏவிவிட்டார் என்று வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து தலைமறைவாக இருந்த மூர்த்தியையும் போலீஸார் கைது செய்தனர். கள்ளக்காதலுக்காக தொழிலதிபரை படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








06 Feb 2019

குப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது

03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்

27 Dec 2018

பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

27 Dec 2018

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களின் தேர்வு நேரத்தில் அரைமணி நேரம் குறைப்பு

25 Dec 2018

குற்றவாளிகளை சுட்டுக் கொல்லும்படி ஆவேசமாக பேசிய முதல் அமைச்சர் குமாரசாமி

25 Dec 2018

வாட்ஸ்-அப் உரையாடல் ,இன்ஸ்பெக்டர் பிடியில் இருக்கும் மனைவியை மீட்டுத்தாருங்கள்” போலீசில் கணவர் புகார்

24 Dec 2018

கிளிஜோதிடர் நடுரோட்டில் வெட்டிக்கொலை தன்னுடன் வாழ்ந்த பெண்ணைப் பிரித்ததால் ஆத்திரம்: நோட்டீஸில் தகவல்