tamilkurinji logo


 

போலீசாருடன் வாக்குவாதம் - அடையாறு ஆற்றில் குதித்த வாலிபர் உடல் மீட்பு,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> தமிழகம்

போலீசாருடன் வாக்குவாதம் - அடையாறு ஆற்றில் குதித்த வாலிபர் உடல் மீட்பு

First Published : Monday , 6th August 2018 07:06:43 PM
Last Updated : Monday , 6th August 2018 07:06:43 PM


போலீசாருடன் வாக்குவாதம் - அடையாறு ஆற்றில் குதித்த வாலிபர் உடல் மீட்பு,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

சென்னை பெசன்ட் நகரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற வாலிபர் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் போலீசில் சிக்கினார்.

குடிபோதையில் அவர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்ததாக தெரிகிறது. இதனையடுத்து அவரை மடக்கி பிடித்த போக்குவரத்து போலீசார் வண்டிக்குரிய ஆவணங்களை கேட்டனர். குடிபோதையில் இருந்ததால் பெற்றோரை அழைத்து வருமாறு கூறினர். இதனால் போலீசாருடன் ராதாகிருஷ்ணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இது எனது நண்பர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் என்று கூறிய ராதாகிருஷ்ணன், அபிராமபுரத்தில் கொண்டு விடுவதற்காக இன்னொரு நண்பரை ஏற்றிச் செல்கிறேன். என்னை விட்டு விடுங்கள் என்று கூறினார்.

ஆனால் போலீசார், ராதாகிருஷ்ணன் அங்கிருந்து செல்வதற்கு அனுமதிக்கவில்லை. இதனால் தன் மீது வழக்கு போட்டு விடுவார்களோ என போலீசுக்கு பயந்து ராதாகிருஷ்ணன், பாலத்தில் இருந்து அடையாறு ஆற்றில் குதித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு நீண்ட நேரமாகியும் ராதாகிருஷ்ணனை கண்டு பிடிக்க முடியவில்லை.

நேற்று 2-வது நாளாக தேடினர். அப்போதும் ராதாகிருஷ்ணன் என்ன ஆனார்? என்பது தெரியாமல் இருந்தது. இன்று 3-வது நாளாக தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது அடையாறு ஆற்று முகத்துவாரத்தில் உள்ள மடையின் 3-வது கண்ணில் ராதாகிருஷ்ணன் உடல் இருப்பதை பார்த்தனர்.

ஆற்றில் குதித்தபோது சேற்றில் சிக்கி ராதாகிருஷ்ணன் பலியாகி உள்ளார். பின்னர் தண்ணீரில் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு உடல் மடையில் சிக்கி உள்ளது.

ராதாகிருஷ்ணன் சாவுக்கு போலீசாரே காரணம் என்று குற்றம் சாட்டிய அவரது உறவினர்கள் திரு.வி.க. பாலம் அருகே இன்று 2-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

போலீசார் விரைந்து சென்று அவர்களுடன் சமாதான பேச்சு நடத்தினர். இதன் காரணமாக மறியல் கைவிடப்பட்டது.

போலீசாருடன் வாக்குவாதம் - அடையாறு ஆற்றில் குதித்த வாலிபர் உடல் மீட்பு,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema போலீசாருடன் வாக்குவாதம் - அடையாறு ஆற்றில் குதித்த வாலிபர் உடல் மீட்பு,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema போலீசாருடன் வாக்குவாதம் - அடையாறு ஆற்றில் குதித்த வாலிபர் உடல் மீட்பு,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது: சைதாப்பேட்டை நீதிமன்றம்
தேச விரோத செயலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது என்று சைதாப்பேட்டை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சென்னையைச் சேர்ந்த திருமுருகன் காந்தி. இவர் ஜெனீவாவில் அண்மையில் நடைபெற்ற ஐ.நா.வின் மனித

மேலும்...

 ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ - சந்தனபெட்டியின் மீது வாசகம்
ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ என கருணாநிதி உடல் வைக்கப்பட்ட சந்தனபெட்டியின் மீது வாசகம் எழுதப்பட்டுள்ளது.5 முறை தமிழக முதல் அமைச்சராகவும் 50 ஆண்டு காலம் திமுக தலைவருமாக இருந்தவருமான கலைஞர் கருணாநிதி நேற்று (ஆகஸ்ட் 7) காலமானார். இந்திய

மேலும்...

 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் அடக்கம்
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நல குறைவால் நேற்று(செவ்வாய்க்கிழமை) மாலை காலமானார். அவருக்கு வயது 95. இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு, ஜனாதிபதி,

மேலும்...

 முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார்
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த கருணாநிதி சென்னையில் காலமானார். 95 வயதான கலைஞர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். 25ம் தேதி உடல்நிலை சரியில்லாமல்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in