பொறியியல் விண்ணாப்பங்கள் மே 4 முதல் வினியோகம்

பொறியியல் விண்ணாப்பங்கள் மே 4 முதல் வினியோகம்
நடப்பு கல்வி ஆண்டில், பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், மே, 4ம் தேதி முதல், தமிழகம் முழுவதும், 59 மையங்களில் வழங்கப்படும்,'' என, அண்ணா பல்கலை துணைவேந்தர் காளிராஜ், நேற்று மாலை, தெரிவித்தார். இந்த ஆண்டு, அரசு ஒதுக்கீட்டின் கீழ், 2 லட்சம் இடங்கள் இருப்பதாகவும், அவர் குறிப்பிட்டார்.

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் முடிந்து, தற்போது, சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள, "டேட்டா சென்டரில்', மதிப்பெண்களை தொகுக்கும் பணி, மும்முரமாக நடந்து வருகிறது.

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களின் முதல், "சாய்ஸ்', பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளாகத் தான் இருக்கின்றன. அதிலும், மருத்துவப் படிப்பிற்கு, "சீட்' கிடைக்கும் மாணவர்கள் கூட, கடைசி நேரத்தில், பொறியியல் கலந்தாய்வுக்கு வந்து விடுகின்றனர்.முன்னணி கல்லூரியில் படிப்பை முடித்தால், கைமேல் வேலை, கை நிறைய சம்பளம் என்ற நிலை இருப்பதால், மாணவர்கள், பொறியியல் படிப்பை, அதிகளவில் தேர்வு செய்கின்றனர்.

நடப்பு ஆண்டிற்கான பொறியியல் சேர்க்கை குறித்த அறிவிப்புகளை, மாணவர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில், ""மே, 4ம் தேதி முதல், பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும்,'' என, அண்ணா பல்கலை துணைவேந்தர் காளிராஜ், நேற்று மாலை அறிவித்தார்.

பொறியியல் சேர்க்கை குறித்த அறிவிப்பு, மே, 3ம் தேதி வெளியிடப்படும். மறுநாள், 4ம் தேதி முதல், 20ம் தேதி வரை, மாநிலம் முழுவதும், 59 மையங்களில், விண்ணப்பங்கள் வழங்கப்படும். அரசு ஒதுக்கீட்டின் கீழ், 2 லட்சம் இடங்கள் உள்ளன.

எனவே, மாணவ, மாணவியருக்குத் தேவையான அளவில், 2 லட்சத்திற்கும் அதிகமாக விண்ணப்பங்களை அச்சடித்து உள்ளோம்.விண்ணப்பங்களைப் பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பவும், மே, 20ம் தேதி கடைசி நாள். அன்று மாலைக்குள், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். கலந்தாய்வு நடக்கும் தேதி விவரங்கள், பின்னர் அறிவிக்கப்படும்.
https://goo.gl/6vGBWw


05 Nov 2013

குழந்தைகளுக்கு படிப்பு வரவில்லையா?

04 Jun 2013

பொறியியல் கலந்தாய்வுக்கான ரேண்டம் நம்பர் வெளியீடு

03 May 2013

பொறியியல் சேர்க்கை விண்ணப்பங்கள் இன்று முதல் விநியோகம்

28 Apr 2013

டெல்லி பல்கலையில் சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

22 Apr 2013

பொறியியல் விண்ணாப்பங்கள் மே 4 முதல் வினியோகம்

25 Mar 2013

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது

19 Mar 2013

சில பள்ளிகளால் பெற்றோர் குழப்பம் முப்பருவ பாடத்திட்டத்தில் ஆண்டு இறுதித்தேர்வு எப்படி?

20 Feb 2013

ஆன்லைனில் செய்முறை பயிற்சி: சிபிஎஸ்இ அறிமுகம்

18 Feb 2013

நாளை பொது வேலைநிறுத்தம்: 10-ம் வகுப்பு செய்முறைத்தேர்வில் மாற்றம் இல்லை

11 Feb 2013

பிளஸ் 2 தேர்வை கண்காணிக்க 5000 பேர் கொண்ட பறக்கும் படை தயார்