பொறியியல் படிப்புக்கான தர வரிசை பட்டியல் வெளியீடு; கோவை மாணவி முதலிடம்

பொறியியல் படிப்புக்கான தர வரிசை பட்டியல் வெளியீடு; கோவை மாணவி முதலிடம்
பொறியியல் படிப்புக்கான தர வரிசை பட்டியலை அமைச்சர் கே.பி. அன்பழகன் இன்று வெளியிட்டு உள்ளார்.

தமிழகத்தில் 509 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பி.இ. படிப்பில் சேர அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்தி வருகிறது. இந்த வருடம் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

இதற்காக கடந்த மே மாதம் 3-ந் தேதி முதல் கடந்த 2-ந் தேதி வரை விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டன. மொத்தம் 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 பேர் விண்ணப்பித்தனர்.

விண்ணப்பித்த மாணவ- மாணவிகள் அனைவருக்கும் ரேண்டம் எண் வெளியிடப்பட்டன. மொத்தம் 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 மாணவ- மாணவிகள் விண்ணப்பித்தனர். மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் 41 மையங்களில் 8-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடைபெற்றது.

ஆனால் அண்ணா பல்கலைக்கழக உதவி மையத்தில் மட்டும் 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடைபெற்றது.  பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு வருகிற ஜூலை 6ல் தொடங்குகிறது.

இந்த நிலையில், சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் பொறியியல் படிப்புக்கான தர வரிசை பட்டியலை அமைச்சர் கே.பி. அன்பழகன் இன்று வெளியிட்டு உள்ளார்.

இந்த பட்டியலில் மாணவி கீர்த்தனா ரவி முதலிடம் பெற்றுள்ளார்.  ரித்விக் 2வது இடமும், ஸ்ரீவர்ஷனி 3வது இடமும் பெற்றுள்ளனர்.  முதல் 10 பேர் 200க்கு 200 கட் ஆப் மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.  இதில் 5,397 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டில் 26 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன.  பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 பேரில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 453 பேருக்கு தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளன.  இந்த நிலையில், 1 லட்சத்து 76 ஆயிரத்து 865 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.  கடந்த ஆண்டு பெறப்பட்ட கட்டணமே இந்த ஆண்டும் பெறப்படும்.

தர வரிசை பட்டியலில் தவறு எதுவும் இருக்குமென்றால் அவற்றை திருத்தி கொள்ள ஒரு வாரம் அவகாசம் வழங்கப்படும்.  மருத்துவ படிப்பிற்கு பின் பொறியியல் படிப்பு கலந்தாய்வு நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
https://goo.gl/gDsRoi


06 Feb 2019

குப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது

03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்

27 Dec 2018

பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

27 Dec 2018

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களின் தேர்வு நேரத்தில் அரைமணி நேரம் குறைப்பு

25 Dec 2018

குற்றவாளிகளை சுட்டுக் கொல்லும்படி ஆவேசமாக பேசிய முதல் அமைச்சர் குமாரசாமி

25 Dec 2018

வாட்ஸ்-அப் உரையாடல் ,இன்ஸ்பெக்டர் பிடியில் இருக்கும் மனைவியை மீட்டுத்தாருங்கள்” போலீசில் கணவர் புகார்

24 Dec 2018

கிளிஜோதிடர் நடுரோட்டில் வெட்டிக்கொலை தன்னுடன் வாழ்ந்த பெண்ணைப் பிரித்ததால் ஆத்திரம்: நோட்டீஸில் தகவல்