tamilkurinji logo


 

பொறியியல் சேர்க்கை விண்ணப்பங்கள் இன்று முதல் விநியோகம்,education news

education,news




பொறியியல் சேர்க்கை விண்ணப்பங்கள் இன்று முதல் விநியோகம்

First Published : Friday , 3rd May 2013 10:20:49 PM
Last Updated : Friday , 3rd May 2013 10:20:49 PM


பொறியியல் சேர்க்கை விண்ணப்பங்கள் இன்று முதல் விநியோகம்,education news

நடப்பு கல்வி ஆண்டில், பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், இன்று (மே 4) முதல், தமிழகம் முழுவதும், 59 மையங்களில் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு, அரசு ஒதுக்கீட்டின் கீழ், 2 லட்சம் பொறியியல் இடங்கள் இருப்பதாக அண்ணா பல்கலை துணைவேந்தர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் முடிந்து, தற்போது, சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள, "டேட்டா சென்டரில்", மதிப்பெண்களை தொகுக்கும் பணி முடிவுறும் நிலையில் உள்ளது. பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களின் முதல், "சாய்ஸ்", பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளாகத் தான் இருக்கின்றன.

அதிலும், மருத்துவப் படிப்பிற்கு, "சீட்" கிடைக்கும் மாணவர்கள் கூட, கடைசி நேரத்தில், பொறியியல் கலந்தாய்வுக்கு வந்து விடுகின்றனர்.முன்னணி கல்லூரியில் படிப்பை முடித்தால், கைமேல் வேலை, கை நிறைய சம்பளம் என்ற நிலை இருப்பதால், மாணவர்கள், பொறியியல் படிப்பை, அதிகளவில் தேர்வு செய்கின்றனர்.

 கடந்த ஆண்டு, பொதுக் கல்வி பிரிவில், 1.74 லட்சம் விண்ணப்பங்கள், தொழிற்கல்வி பிரிவில், 6,000 விண்ணப்பங்கள் என, 1.8 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அரசு ஒதுக்கீட்டின் கீழ், 1.75 லட்சம் இடங்கள் இருந்தன. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள், கடைசி வரை நிரம்பவில்லை.

இந்த ஆண்டு, அரசு ஒதுக்கீட்டு இடங்கள், 2 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டை விட, அதிக மாணவ, மாணவியர் விண்ணப்பிப்பர் என, அண்ணாபல்கலை எதிர்பார்க்கிறது. எனவே, 2.5 லட்சம் விண்ணப்பங்களை அச்சிட்டுள்ளது.சென்னையில் 4 இடங்களில் படிவம் விற்பனை செய்யப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழக வளாகம், குரோம்பேட்டை, ஐ.எம்.ஐ.டி., புரசைவாக்கம் அரசு பாலிடெக்னிக், பிராட்வே பாரதி அரசு பெண்கள் கல்லூரி உள்ளிட்ட தமிழகத்தில் 59 மையங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக 2 1/2 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

விண்ணப்பத்தின் விலை ரூ.500. எஸ்.சி., எஸ்.சி (அருந்ததி), எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.250 சலுகை விலையில் வழங்கப்படுகிறது. சலுகை விலையில் பெறத் தகுதியுடையவர்கள் அதற்கான ஜாதி சான்றிதழ்களின் நகல் கொடுக்க வேண்டும். தபால் மூலம் விண்ணப்பம் பெற விரும்புபவர்கள் ரூ.700-க்கு வரைவு காசோலை எடுக்க வேண்டும். "செயலாளர், தமிழ்நாடு என்ஜினீயரிங் சேர்க்கை அண்ணா பல்கலைக்கழகம், சென்னை-600025" என்ற முகவரிக்கு காசேலை எடுக்க வேண்டும்.

விண்ணப்பம் வழங்கும் இடங்கள் மற்றும் சேர்க்கை அட்டவணை தொடர்பான விவரங்கள் அனைத்தையும், www.annauniv.edu என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.


பொறியியல் சேர்க்கை விண்ணப்பங்கள் இன்று முதல் விநியோகம்,education news பொறியியல் சேர்க்கை விண்ணப்பங்கள் இன்று முதல் விநியோகம்,education news பொறியியல் சேர்க்கை விண்ணப்பங்கள் இன்று முதல் விநியோகம்,education news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பொறியியல் கலந்தாய்வுக்கான ரேண்டம் நம்பர் வெளியீடு
தமிழ்நாட்டில் 553 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் ஏறத்தாழ 2 லட்சம் பி.இ., பி.டெக். இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட இருக் கின்றன. இந்த ஆண்டு புதிதாக 11 பொறியியல் கல்லூரிகள் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) அங்கீகாரம்

மேலும்...

 டெல்லி பல்கலையில் சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
தில்லி பல்கலைக்கழகத்தில், இக்கல்வியாண்டில் எல்எல்.பி, எல்எல்.எம் ஆகிய படிப்புகளில் சேர நுழைவுத்தேர்வுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.எல்.எல்.பி., படிப்புகளில் சேர இளநிலை அல்லது முதுகலை பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மாற்றுத்திறனாளி பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால்

மேலும்...

 பொறியியல் விண்ணாப்பங்கள் மே 4 முதல் வினியோகம்
நடப்பு கல்வி ஆண்டில், பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், மே, 4ம் தேதி முதல், தமிழகம் முழுவதும், 59 மையங்களில் வழங்கப்படும்,'' என, அண்ணா பல்கலை துணைவேந்தர் காளிராஜ், நேற்று மாலை, தெரிவித்தார். இந்த ஆண்டு, அரசு ஒதுக்கீட்டின் கீழ், 2

மேலும்...

 எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது
பிளஸ்-2 தேர்வு முடிவடையும் நிலையில், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை (புதன்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஏப்ரல்) 12-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10½ லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.பிளஸ்-2 தேர்வு கடந்த 1-ந்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in