பெரியபாளையத்தில் ஆடி திருவிழா

பெரியபாளையத்தில் ஆடி திருவிழா
ஆடி 3வது வார விழாவையொட்டி பெரியபாளையம் பவானியம்மன் கோயிலில் ஆடு, கோழி பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பெரியபாளையம் பவானியம்மன் கோயிலில் ஆடித்திருவிழா கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கியது. மொத்தம் 16 வாரங்கள் விழா நடைபெறும். நேற்று மூன்றாவது வாரமாகும்.

சென்னை, காஞ்சிபுரம். திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து பஸ், வேன், கார், ஆட்டோ, மாட்டு வண்டிகளில் பக்தர்கள் நேற்று முன்தினம் இரவு கோயிலுக்கு வந்தனர். நேற்று அதிகாலை பவானியம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியம் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

பிறகு அம்மனுக்கு பெண்கள் பொங்கல் வைத்தனர். பக்தர்கள் மொட்டையடித்து உடம்பில் வேப்பிலை கட்டி ஆடு, கோழிகளை பலியிட்டு அம்மனை வழிபட்டனர். கோயிலை சுற்றி வந்து சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி ஆந்திராவில் இருந்து சென்னை செல்லும் கனரக வாகனங்கள் ஊத்துக்கோட்டையில் இருந்து திருவள்ளூர் வழியாகவும், சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் வாகனங்கள் ஜனப்பன்சத்திரம் கூட் ரோட்டில் இருந்து சத்தியவேடு வழியாகவும் ஆந்திராவுக்கு திருப்பி விடப்பட்டன.
https://goo.gl/NA4Nwp


28 Oct 2014

இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்

21 Sep 2014

மகாளய அமாவாசை -பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு

21 Jul 2014

அற்புத பலன் தரும் ஆடி அமாவாசை

24 Sep 2013

மகிமை நிறைந்த மகாளய அமாவாசை

08 Jun 2013

திருமலையில் மூன்று நாட்களில் 2.5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

23 Apr 2013

மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்

17 Apr 2013

ஆன்மீக செய்திகள்

11 Apr 2013

சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் நடை 10 மணி நேரம் அடைக்கப்படும்

07 Apr 2013

அகஸ்தீஸ்வரர் கோவிலில் லிங்கம் மீது சூரியஒளி விழும் அதிசயம்

25 Mar 2013

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு