tamilkurinji logo


 

பெண்ணை காலால் எட்டி உதைத்த திமுக நிர்வாகி தற்காலிக நீக்கம்: திமுக அறிவிப்பு,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> தமிழகம்

பெண்ணை காலால் எட்டி உதைத்த திமுக நிர்வாகி தற்காலிக நீக்கம்: திமுக அறிவிப்பு

First Published : Thursday , 13th September 2018 08:10:50 PM
Last Updated : Thursday , 13th September 2018 08:10:50 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

பெண்ணை காலால் எட்டி உதைத்த திமுக நிர்வாகி தற்காலிக நீக்கம்: திமுக அறிவிப்பு,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

பெரம்பலூர் பாரதிதாசன் நகரில் பிரபல தனியார் கல்லூரிக்கு செல்லும் வழியில் அழகு நிலையம் நடத்தி வருபவர் சத்தியா (வயது 35). இவருக்கும் பெரம்பலூர் வேப்பந்தட்டை அன்னமங்கலத்தை சேர்ந்த  தி.மு.க. பிரமுகர் செல்வகுமார் (52) என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

செல்வக்குமார் தற்போது சத்தியா பியூட்டி பார்லர் நடத்தி வரும் பாரதிதாசன் நகரில் குடியிருந்துகொண்டு பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் செல்வகுமார் சத்தியாவின் பியூட்டி பார்லருக்குள் புகுந்து அவரை சரமாரியாக காலால் உதைத்து தாக்கினார்.

கடந்த 4 மாதத்திற்கு முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தற்போது வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது. தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது. இந்த சம்பவத்தை வாட்ஸ்அப் மற்றும் தொலைக்காட்சிகளில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தி.மு.க.வினர் மத்தியிலும் இந்த காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அழகு நிலையத்திற்குள் புகுந்து சத்தியாவை காலால் செல்வக்குமார் எட்டி எட்டி உதைக்கிறார். பலமுறை சத்தியாவிற்கு உதை விழுகிறது. அப்போது சத்தியா அடிக்காதீர்கள் அடிக்காதீர்கள் என்று கதறுவதும் மற்ற பெண் ஊழியர்கள் அதை தடுக்க முடியாமல் தவிப்பதும், அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம்தான் வாட்ஸ்அப்பில் இன்று வைரலாக பரவியது. 4 மாதத்திற்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தை இதுவரை வெளியில் விடாமல் இப்போது அதனை வெளியிட்டது ஏன்? வெளியிட்டது யார்? என போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.இந்தநிலையில் வீடியோ காட்சிகளை வெளியிட்டது சத்தியா என்பது தெரிய வந்தது.

செல்வகுமார் தாக்கியது தொடர்பாக சத்தியா பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர் வீடியோ காட்சிகளை தொலைக்காட்சி சேனல்களுக்கு அனுப்பியுள்ளார். வாட்ஸ்அப்பிலும் வெளியிட்டுள்ளார்.

இதையடுத்தே இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி தி.மு.க.முன்னாள் கவுன்சிலர் செல்வகுமாரை இன்று கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பெரம்பலூர் திமுக நிர்வாகி செல்வகுமார் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். 

இது குறித்து க.அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- “ பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியம் அன்னமங்கலம் கிராமத்தைச்சேர்ந்த மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் உறுப்பினர் எஸ்.செல்வகுமார் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வந்தால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் ”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்ணை காலால் எட்டி உதைத்த திமுக நிர்வாகி தற்காலிக நீக்கம்: திமுக அறிவிப்பு,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema பெண்ணை காலால் எட்டி உதைத்த திமுக நிர்வாகி தற்காலிக நீக்கம்: திமுக அறிவிப்பு,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema பெண்ணை காலால் எட்டி உதைத்த திமுக நிர்வாகி தற்காலிக நீக்கம்: திமுக அறிவிப்பு,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வட தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
வட தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் கடந்த மூன்று தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில்

மேலும்...

 பள்ளி மாணவனை திருமணம் செய்த கல்லூரி மாணவி கைது
திருவண்ணாமலை மாவட்டம் கெங்கல மகாதேவி பகுதியை சேர்ந்த இளம்பெண் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னுடைய மகளை மீட்டுத் தருமாறும் இளம்பெண்ணின் பெற்றோர் திருவண்ணாமலை

மேலும்...

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
தமிழகம் மற்றம் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாகவே பரவலாக லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அடுத்து வரும் தினங்களிலும் வட

மேலும்...

 நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் அபாயம்
நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை நிலவுவதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் நிலக்கரி பற்றாக்குறைக்கு தமிழக அரசின் கமிஷன் பெறும் உள்நோக்கம் காரணமாக இருக்கலாம் என்று

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in