பெண்ணாக இருந்து ஆணாக மாறி காதல் திருமணம் செய்தவர் தீக்குளிப்பு

பெண்ணாக இருந்து ஆணாக மாறி காதல் திருமணம் செய்தவர் தீக்குளிப்பு
கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்தவர் இளவரசி (வயது 26). இவர், புதுவை கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவ கல்லூரி எதிரே உள்ள அழகு நிலையத்தில் (பியூட்டி பார்லர்) வேலை பார்த்து வருகிறார்.

இவரிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவ கல்லூரியில் ஸ்டோர் கீப்பராக வேலை பார்த்து வரும் திருச்செந்தூரை சேர்ந்த யஷ்வந்தய்யா (28) என்பவர் பழக்கமானார். நாளடைவில் இது காதலாக மாறியது.

இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். இருவரும் சில மாதங்கள் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் தாம்பத்திய உறவில் யஷ்வந்தய்யாவுக்கு நாட்டம் இல்லாததால் அவர் மீது இளவரசிக்கு சந்தேகம் ஏற்பட்டது.

பின்னர் விசாரித்த போது, யஷ்வந்தய்யா பெண்ணாக இருந்து ஆணாக மாறி அறுவை சிகிச்சை செய்திருப்பது இளவரசிக்கு தெரியவந்தது.

இதனால் யஷ்வந்தய்யாவை பிரிந்து இளவரசி வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று திருமண நாளையொட்டி இளவரசியை யஷ்வந்தய்யா சந்தித்தார். அப்போது இருவரும் சேர்ந்து வாழலாம் என அவர் இளவரசியிடம் வற்புறுத்தினார்.

ஆனால், இதற்கு இளவரசி சம்மதிக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த யஷ்வந்தய்யா பாட்டிலில் தயாராக எடுத்து சென்ற பெட்ரோலை உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார்.

தீ உடல் முழுவதும் பரவியதால் வலி தாங்காமல் யஷ்வந்தய்யா அலறி துடித்தார். பின்னர் அருகில் இருந்த கழிவுநீர் வாய்க்காலில் உருண்டு புரண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கிருமாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று யஷ்வந்தய்யாவை மீட்டு அவர் வேலை பார்க்கும் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு யஷ்வந்தய்யா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
https://goo.gl/QFTkcb






18 Dec 2018

ஐபிஎல் ஏலம் : அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள்

14 Dec 2018

4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை

13 Dec 2018

தெலங்கானா முதல்வராக தொடர்ந்து 2-வது முறையாக சந்திரசேகர் ராவ் பதவி ஏற்றார்

11 Dec 2018

பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு

11 Dec 2018

பா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி

10 Dec 2018

பா.ஜனதாவை வீழ்த்த 14 கட்சி கூட்டணி- டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை

10 Dec 2018

நாடு முழுவதும் செங்கல் மூலம் கட்டிடம் கட்டத் தடை: மத்திய அரசு திட்டம்

16 Oct 2018

நாளை நடைதிறப்பு - சபரிமலை கோவிலில் பலத்த பாதுகாப்பு

11 Oct 2018

மசூதியில் பெண்களை தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும்: கேரள முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு

10 Oct 2018

சிறுமி பலாத்காரம் “என்னுடைய மகனை தூக்கிலிடுங்கள், மற்றவர்களை தாக்காதீர்கள்