பிளஸ் 2 தேர்வை கண்காணிக்க 5000 பேர் கொண்ட பறக்கும் படை தயார்

பிளஸ் 2 தேர்வை கண்காணிக்க 5000 பேர் கொண்ட பறக்கும் படை தயார்

பிளஸ் 2 பொதுத் தேர்வு பணிகளை மேற்பார்வையிட சிறப்பு கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களை ஆய்வு செய்ய 5000 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்குகிறது. இந்த தேர்வை பள்ளிகள் மூலம் 8 லட்சத்து 4072 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். தனி தேர்வர்களாக 52 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். தமிழகம் முழுவதும் 2004 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமையில் 32 மாவட்டங்களுக்கும் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 5,000 ஆசிரியர்கள் இடம் பெற்றுள்ள னர். மேலும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் வருவாய் அலுவலர்களை கொண்ட பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆர்டிஓ, தாசில்தார், பிடிஓ இடம் பெறுகின்றனர்.

இதுதவிர தேர்வில் முறைகேடுகள் செய்வது, குற்றங்களில் ஈடுபடுவோரை தடுக்கவும், கண்டுபிடிக்கவும் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர்களும் ஈடுபடுவார்கள். மேலும், கேள்வித்தாள் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து அந்தந்த தேர்வு மையங்களுக்கு, உரிய நேரத்தில் கேள்வித்தாள் எடுத்து செல்வதற்கு வசதியாக மார்ச் 1ம் தேதி முதல் ஏப்ரல் 12ம் தேதி வரை மாவட்ட கலெக்டர்கள் வாகனங்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு நாள் தேர்வு முடிந்ததும், விடைத்தாள்கள் உரிய நேரத்தில் உரிய இடங்களுக்கு எடுத்து செல்வதற்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மேற்கொள்வார்கள். இந்த பணிகளில் எந்த குழப்பமும், தாமதமும் ஏற்படாத வகையில் 32 மாவட்டங்களையும் கண்காணிக்க 18 இணை இயக்குநர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 4,000க்கும் மேற்பட்ட கண்காணிப்பு உறுப்பினர்கள் (பறக்கும் படை) தேர்வு மையங்களை தீவிரமாக கண்காணிப்பார்கள்.

தொழில் கல்வி படிப்புகளான மருத்துவம், பொறியியல் பட்டப் படிப்புகளுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் இயற்பியல், கணக்கு, விலங்கியல், வேதியியல், உயிரியல், தாவரவியல் ஆகிய 6 பாடங்களுக்கான தேர்வுகள் மார்ச் 11, 14, 18, மற்றும் 21ம் தேதிகளில் நடக்கிறது. இந்த தேர்வுகள் நடக்கும் நாட்களில் அனைத்து தேர்வு மையங்களிலும், அதே மாவட்டத்தை சேர்ந்த வேறு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் முதன்மை கண்காணிப்பாளர்களாக இருந்து தேர்வை நடத்துவார்கள். மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த அலுவலர்கள் முக்கிய பாடங்களுக்கான தேர்வு நாட்களில், தேர்வு மையங்களை பார்வையிட சிறப்பு பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

https://goo.gl/uYw725


05 Nov 2013

குழந்தைகளுக்கு படிப்பு வரவில்லையா?

04 Jun 2013

பொறியியல் கலந்தாய்வுக்கான ரேண்டம் நம்பர் வெளியீடு

03 May 2013

பொறியியல் சேர்க்கை விண்ணப்பங்கள் இன்று முதல் விநியோகம்

28 Apr 2013

டெல்லி பல்கலையில் சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

22 Apr 2013

பொறியியல் விண்ணாப்பங்கள் மே 4 முதல் வினியோகம்

25 Mar 2013

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது

19 Mar 2013

சில பள்ளிகளால் பெற்றோர் குழப்பம் முப்பருவ பாடத்திட்டத்தில் ஆண்டு இறுதித்தேர்வு எப்படி?

20 Feb 2013

ஆன்லைனில் செய்முறை பயிற்சி: சிபிஎஸ்இ அறிமுகம்

18 Feb 2013

நாளை பொது வேலைநிறுத்தம்: 10-ம் வகுப்பு செய்முறைத்தேர்வில் மாற்றம் இல்லை

11 Feb 2013

பிளஸ் 2 தேர்வை கண்காணிக்க 5000 பேர் கொண்ட பறக்கும் படை தயார்