tamilkurinji logo


 

பிரம்மோற்சவ விழா - திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தங்க தேரோட்டம்,Thiruppathi

Thiruppathi




பிரம்மோற்சவ விழா - திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தங்க தேரோட்டம்

First Published : Sunday , 23rd September 2012 09:46:44 PM
Last Updated : Sunday , 23rd September 2012 10:27:04 PM


பிரம்மோற்சவ விழா - திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தங்க தேரோட்டம்,Thiruppathi

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டி நேற்று பெண்களே இழுத்த தங்க தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான நேற்று காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை அனுமந்த வாகனத்தில் உற்சவரான மலையப்பசாமி ராமர் அவதாரத்தில் நான்கு மாட வீதிகளில் வீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதையடுத்து மாலையில் உற்சவரான மலையப்பசாமி ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக தங்க-வைர நகைகள் மற்றும் சிறப்பு அலங்காரத்துடன் தங்க தேரில் வைத்து மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை தேரோட்டம் நடந்தது.

தங்க தேரை பெண்களே இழுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேரோட்டத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கனுமூரிபாபி ராஜு, தேவஸ்தான செயல் அலுவலர் எல்.வி.சுப்பிரமணியம், திருமலை துணை அதிகாரி சீனிவாசராஜு, திருப்பதி துணை அதிகாரி வெங்கட்ராமி ரெட்டி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜ×ரெட்டி, சிவபிரசாத், கோவில் அதிகாரி முனிரத்தினம் ரெட்டி, டி.ஐ.ஜி. சாருசின்னா, போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர்ராவ் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பிரம்மோற்சவ விழா - திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தங்க தேரோட்டம்,Thiruppathi பிரம்மோற்சவ விழா - திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தங்க தேரோட்டம்,Thiruppathi பிரம்மோற்சவ விழா - திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தங்க தேரோட்டம்,Thiruppathi
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.திருச்செந்தூர் முருகன் கோயிலின் தலபுராணப்படி, சூரபத்மனை முருகப் பெருமான் வதம் செய்த இடம் என்பதால்

மேலும்...

 மகாளய அமாவாசை -பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு
ஒவ்வொரு புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும்  புனிதமான அமாவாசை ஆகும். தட்சனாயத்தில் வரும் முதல் அமாவாசையான  ஆடி அமாவாசை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதைவிட பல மடங்கு முக்கியத்துவம் பெறும் அமாவாசை புரட்டாசி அமாவாசை ஆகும். இந்த அமாவாசை நாள்

மேலும்...

 மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்
மதுரை சித்திரை திருவிழாவில் வேதமந்திரங்கள் முழங்க மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நேற்று கோலாகலமாக நடந்தது. இன்று காலை நான்கு மாசிவீதிகளில் தோரோட்டம் நடைபெறுகிறது.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்.14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று  முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணத்திற்காக

மேலும்...

 ஆன்மீக செய்திகள்
ஞாயிற்றுக் கிழமை விநாயகர் வழிபாடு: வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள நோக்குண்டாம் மேணி நுடங்காது - பூக் கொண்ட துப்பார் திரு மேனித்தும் பிக்கை யான் பாதம தப்பாமல் சார் வார் தமக்கு. ?? முருகன் வழிபாடு: முருகனே செந்தில் முதல்வனே மாயோன் மருகனே ஈசன் மகனே - ஒருகை முகன தம்பியே

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in