பிரபல ரவுடியை வெட்டிக் கொலை செய்த சிறுவர்கள் உள்பட 8 பேர் கைது

பிரபல ரவுடியை வெட்டிக் கொலை செய்த சிறுவர்கள் உள்பட 8 பேர் கைது
சென்னை பெரம்பூரில் பிரபல ரவுடியை வெட்டிக் கொலை செய்த சிறுவர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வியாசர்பாடியை சேர்ந்த தக்காளி பரத் என்பவர் பிரபல ரவுடியாக வலம் வந்தவர்.

இவர் பெரம்பூர் சாஸ்திரி நகர் அருகே நேற்று இரவு தனியாக இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது 8 பேர் கொண்ட கும்பல் தக்காளி பரத்தை சரமாரியாக வெட்டினர்.


இதில் படுகாயம் அடைந்த அவருக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஓட்டேரி அருகே ஒரு வீட்டில் பதுங்கி இருந்த 8 பேர் கொண்ட கொலை கும்பலை செம்பியம் போலீசார் கைது செய்தனர்.

அவர்களில் நான்கு பேர் 16 வயதுக்கும் உட்பட்டவர்கள் என கூறப்படுகிறது. முன் விரோதம் காரணமாக கொலை நடந்திருப்பதாக கூறப்படுகிறது. 
https://goo.gl/z52bg6


17 Mar 2019

2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

06 Mar 2019

தேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி

06 Mar 2019

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு

19 Feb 2019

குடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை

19 Feb 2019

அ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி

06 Feb 2019

குப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது

03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்