tamilkurinji logo


 

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு: திமுக தலைவர் கருணாநிதி வீட்டில் கருப்புக்கொடி ஏற்றம்,Karunanidhi: Latest News, Photos, Videos on Karunanidhi -

Karunanidhi:,Latest,News,,Photos,,Videos,on,Karunanidhi,-




செய்திகள் >>> தமிழகம்

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு: திமுக தலைவர் கருணாநிதி வீட்டில் கருப்புக்கொடி ஏற்றம்

First Published : Thursday , 12th April 2018 01:37:59 PM
Last Updated : Thursday , 12th April 2018 01:37:59 PM


பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு: திமுக தலைவர் கருணாநிதி வீட்டில் கருப்புக்கொடி ஏற்றம்,Karunanidhi: Latest News, Photos, Videos on Karunanidhi -

பிரதமர் நரேந்திர மோடி சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகேயுள்ள திருவிடந்தையில் நடைபெறும் ராணுவ தளவாட கண்காட்சியை முறைப்படி தொடங்கி வைத்து பார்வையிடுவதற்காக தமிழகம் வருகிறார்.

இந்த கண்காட்சி நேற்று தொடங்கி 14-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. ராணுவ கண்காட்சி நேற்று தொடங்கினாலும், அதன் தொடக்க விழா இன்று நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, ராணுவ கண்காட்சியை முறைப்படி தொடங்கி வைத்து பார்வையிடுகிறார்.

இதற்காக பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து இன்று காலை சென்னை வருகிறார்.

டெல்லியில் இருந்து இன்று காலை 6.40 மணி அளவில் தனி விமானத்தில் புறப்படும் அவர், காலை 9.20 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தடைகிறார்.

பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் மாமல்லபுரம் செல்கிறார்.  அதன்பின் அங்கிருந்து காரில் கண்காட்சி நடைபெறும் திருவிடந்தைக்கு செல்கிறார்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பின்னரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமரின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்ட வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வரும் நாளை துக்க நாளாக கடைபிடிக்கும் வகையில், 12-ம் தேதியன்று எல்லோருடைய வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்ற வேண்டுமென்றும், அனைவரும் கருப்பு உடையணிய வேண்டும் என்றும், கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்றும் தி.மு.க. தலைமை கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதற்காக தி.மு.க.வின் தலைமையகம் அமைந்திருக்கும் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம் மற்றும் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டில் இன்று கருப்பு கொடி ஏற்றப்பட்டது.


பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு: திமுக தலைவர் கருணாநிதி வீட்டில் கருப்புக்கொடி ஏற்றம்,Karunanidhi: Latest News, Photos, Videos on Karunanidhi - பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு: திமுக தலைவர் கருணாநிதி வீட்டில் கருப்புக்கொடி ஏற்றம்,Karunanidhi: Latest News, Photos, Videos on Karunanidhi - பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு: திமுக தலைவர் கருணாநிதி வீட்டில் கருப்புக்கொடி ஏற்றம்,Karunanidhi: Latest News, Photos, Videos on Karunanidhi -
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது: சைதாப்பேட்டை நீதிமன்றம்
தேச விரோத செயலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது என்று சைதாப்பேட்டை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சென்னையைச் சேர்ந்த திருமுருகன் காந்தி. இவர் ஜெனீவாவில் அண்மையில் நடைபெற்ற ஐ.நா.வின் மனித

மேலும்...

 ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ - சந்தனபெட்டியின் மீது வாசகம்
ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ என கருணாநிதி உடல் வைக்கப்பட்ட சந்தனபெட்டியின் மீது வாசகம் எழுதப்பட்டுள்ளது.5 முறை தமிழக முதல் அமைச்சராகவும் 50 ஆண்டு காலம் திமுக தலைவருமாக இருந்தவருமான கலைஞர் கருணாநிதி நேற்று (ஆகஸ்ட் 7) காலமானார். இந்திய

மேலும்...

 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் அடக்கம்
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நல குறைவால் நேற்று(செவ்வாய்க்கிழமை) மாலை காலமானார். அவருக்கு வயது 95. இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு, ஜனாதிபதி,

மேலும்...

 முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார்
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த கருணாநிதி சென்னையில் காலமானார். 95 வயதான கலைஞர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். 25ம் தேதி உடல்நிலை சரியில்லாமல்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in