tamilkurinji logo


 

பாலியல் தொல்லை கொடுத்த கார் டிரைவர் மதுவில் விஷம் கலந்து கொலை ,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> தமிழகம்

பாலியல் தொல்லை கொடுத்த கார் டிரைவர் மதுவில் விஷம் கலந்து கொலை

First Published : Monday , 23rd July 2018 11:18:23 AM
Last Updated : Monday , 23rd July 2018 11:18:23 AM


பாலியல் தொல்லை கொடுத்த  கார் டிரைவர் மதுவில் விஷம் கலந்து கொலை ,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

 பாலியல் தொல்லை தந்த கார் டிரைவர் மதுவில் விஷம் கலந்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது கள்ளக்காதலி மற்றும் நண்பரை போலீசார் கைது செய்தனர்.  

சென்னை மதுரவாயல், ஓம்சக்தி நகர், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (36). கால்டாக்சி டிரைவர். இவரது மனைவி நளினி (32). ராஜேஷுக்கு குடிப்பழக்கம் உள்ளது.  கடந்த 15ம் தேதி இரவு வேலை முடிந்து நள்ளிரவாகியும் ராஜேஷ் வீடு திரும்பாததால், அவரது செல்போனுக்கு நளினி தொடர்பு கொண்டார்.

அப்போது ராஜேஷின் செல்போனை எடுத்து பேசிய அதே பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவர், அவர் குடிபோதையில் காருக்குள் மயங்கி கிடப்பதாக நளினிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு நளினி வந்து, குமரேசனின் உதவியுடன் காரில் ராஜேஷை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.

அவரை வீட்டிற்குள் அழைத்து வரமுடியாததால் மனைவி நளினி கணவர் ராஜேஷை காரிலேயே படுக்க வைத்து விட்டார். இந்நிலையில் காருக்குள்ளேயே போதையில் மயங்கிக் கிடந்த கணவர் ராஜேஷை மறுநாள் காலையில் நளினி பார்த்தபோது வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜேஷின் சடலத்தை அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். பிரேத பரிசோதனை முடிந்து உடல் அடக்கம் செய்யப்பட்டது.


இந்நிலையில், ராஜேஷின் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று முன்தினம் மதுரவாயல் போலீசாருக்கு கிடைத்தது. அதில், ராஜேஷ் குடித்த மதுவில் விஷம் கலந்திருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து, ராஜேஷை காரில் கொண்டு வந்த குமரேசனை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த பத்மாவதி (30) என்ற பெண்ணுடன் ராஜேஷுக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.
இவர் அடிக்கடி மதுபோதையில் வந்து பத்மாவதிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.


இதுகுறித்து தனது மற்றொரு ஆண் நண்பரான குமரேசனிடம் கூறி, அவரை கொல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார். இதையடுத்து, ஆலப்பாக்கம் பிரதான சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் ராஜேஷ் மது அருந்தியபோது, அங்கு வந்த குமரேசன், ராஜேஷ் குடித்த மதுவில் விஷத்தை கலந்துவிட்டதாக போலீசில் குமரேசன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து மதுரவாயல் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து, குமரேசன், பத்மாவதி ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், இறந்துபோன ராஜேஷின் சடலத்தை நேற்று காலை மதுரவாயல் தாசில்தார் செந்தில்குமார் முன்னிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவர்கள் தோண்டி எடுத்து சம்பவ இடத்திலேயே மீண்டும் பிரேத பரிசோதனை செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவர் மற்றும் ராஜேஷின் உறவினர்கள் அங்கு குவிந்திருந்ததால், மதுரவாயல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


பாலியல் தொல்லை கொடுத்த  கார் டிரைவர் மதுவில் விஷம் கலந்து கொலை ,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema பாலியல் தொல்லை கொடுத்த  கார் டிரைவர் மதுவில் விஷம் கலந்து கொலை ,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema பாலியல் தொல்லை கொடுத்த  கார் டிரைவர் மதுவில் விஷம் கலந்து கொலை ,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது: சைதாப்பேட்டை நீதிமன்றம்
தேச விரோத செயலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது என்று சைதாப்பேட்டை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சென்னையைச் சேர்ந்த திருமுருகன் காந்தி. இவர் ஜெனீவாவில் அண்மையில் நடைபெற்ற ஐ.நா.வின் மனித

மேலும்...

 ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ - சந்தனபெட்டியின் மீது வாசகம்
ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ என கருணாநிதி உடல் வைக்கப்பட்ட சந்தனபெட்டியின் மீது வாசகம் எழுதப்பட்டுள்ளது.5 முறை தமிழக முதல் அமைச்சராகவும் 50 ஆண்டு காலம் திமுக தலைவருமாக இருந்தவருமான கலைஞர் கருணாநிதி நேற்று (ஆகஸ்ட் 7) காலமானார். இந்திய

மேலும்...

 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் அடக்கம்
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நல குறைவால் நேற்று(செவ்வாய்க்கிழமை) மாலை காலமானார். அவருக்கு வயது 95. இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு, ஜனாதிபதி,

மேலும்...

 முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார்
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த கருணாநிதி சென்னையில் காலமானார். 95 வயதான கலைஞர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். 25ம் தேதி உடல்நிலை சரியில்லாமல்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in