பார்த்தசாரதி சுவாமி கோவில் தேரோட்டம்

பார்த்தசாரதி சுவாமி கோவில் தேரோட்டம்
சென்னை பார்த்தசாரதி சுவாமி கோவிலில் நரசிம்மசுவாமி பிரமோற்சவத்தையொட்டி நேற்று நடந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வைணவத் தலங்களில் மிகவும் பழமையானதும், 108 திவ்ய தேசங்களில் துளசிவனம் என்றழைக்கப்படும் கோவில் சென்னை பார்த்தசாரதி கோவில். இங்கு பார்த்தசாரதி, அழகியசிங்கர், ரங்கநாதர், சக்கரவர்த்தி திருமகன் மற்றும் கஜேந்திர வரதர் ஆகிய ஐந்து எம்பெருமான்கள் எழுந்தருளியுள்ளனர்.

அத்துடன் யோக நரசிம்மர் யோகாசனத்தில் யோக நிலையில் மேற்கு திசை பார்த்து நோய் தீர்க்கும் பெருமானாக அருள்பாலிக்கிறார். உற்சவர் தெள்ளியசிங்கர் (அழகிய சிங்கர்) ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் நான்கு திருக்கரங்களுடன் சங்கு, சக்கரம் ஏந்தி அருள்பாலிக்கிறார்.

இங்கு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஸ்ரீ நரசிம்ம சுவாமி பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. இந்த ஆண்டு விழா கடந்த 28-ந் தேதி தொடங்கியது. கடந்த 30-ந்தேதி காலை 5.30 மணிக்கு கோபுரவாசல் தரிசனமும் கருட சேவையும் நடந்தது. முக்கிய திருநாளான நேற்று காலை 7 மணிக்கு தேரோட்டத்திற்கான திருதேர் வடம் பிடிக்கப்பட்டது.

நரசிம்மசுவாமி திருத்தேரில் எழுந்தருளி மாடவீதிகளை வலம் வந்தார். காலை 9.30 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை 6-ந் தேதி காலை 11 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது. 7-ந் தேதி கொடியிறக்க உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் துணை-ஆணையர் கூடுதல் பொறுப்பு ஜெகந்நாதன் உட்பட பலர் செய்து வருகின்றனர்.
https://goo.gl/2Gf6hf


28 Oct 2014

இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்

21 Sep 2014

மகாளய அமாவாசை -பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு

21 Jul 2014

அற்புத பலன் தரும் ஆடி அமாவாசை

24 Sep 2013

மகிமை நிறைந்த மகாளய அமாவாசை

08 Jun 2013

திருமலையில் மூன்று நாட்களில் 2.5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

23 Apr 2013

மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்

17 Apr 2013

ஆன்மீக செய்திகள்

11 Apr 2013

சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் நடை 10 மணி நேரம் அடைக்கப்படும்

07 Apr 2013

அகஸ்தீஸ்வரர் கோவிலில் லிங்கம் மீது சூரியஒளி விழும் அதிசயம்

25 Mar 2013

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு