பழநியில் ரோப்கார் நிறுத்தம்

பழநியில் ரோப்கார் நிறுத்தம்
ஆண்டு பராமரிப்பு பணிக்காக பழநி கோயில் "ரோப்கார்' நாளை (ஜூலை 20) முதல் நிறுத்தப்படுகிறது.

கோயில் இணை கமிஷனர் பாஸ்கரன் நிருபர்களிடம் கூறியதாவது:

அர்ச்சனை கட்டனம் ரூ.1,100 வசூல் செய்யப்படுகிறது. உச்சிகாலத்தில் மகா சங்கல்பம் செய்து, விபூதி, குங்கும பிரசாதத்துடன், ராஜ அலங்கார படம் தரப்படும். பஞ்சாமிர்த அபிஷேக கட்டளை ரூ.1,500. ஆண்டிற்கு ஒருமுறை பஞ்சாமிர்தம், விபூதி, குங்குமம், உச்சிகாலத்தில் மகா சங்கல்பம் செய்து ராஜ அலங்கார படம் அனுப்பி வைக்கப்படும். மலைக்கோயிலில் சிறப்பு பூஜை செய்தல், தங்கத்தேர் இழுக்க பணம், ரூம் புக் செய்தல் போன்றவை ஆன்-லைனில் புக் செய்யும் வசதி விரைவில் ஏற்படுத்தி தரப்படும். இரண்டாம் ரோப்கார் திட்ட மதிப்பீடு ரூ.18 கோடி. ஒரு மணிக்கு 1,500 பேர் செல்லும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. அறநிலையத்துறை கமிஷனரிடம் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பராமரிப்பு: ரோப்கார் ஆண்டு பராமரிப்பு பணி நாளை துவங்குகிறது. பணிகள் முடிந்து ஆக.,17ல் சோதனை ஓட்டம் நடத்தப்படும். ஆக.,20ல் மீண்டும் ரோப்கார் இயக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
https://goo.gl/KcKGqn


28 Oct 2014

இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்

21 Sep 2014

மகாளய அமாவாசை -பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு

21 Jul 2014

அற்புத பலன் தரும் ஆடி அமாவாசை

24 Sep 2013

மகிமை நிறைந்த மகாளய அமாவாசை

08 Jun 2013

திருமலையில் மூன்று நாட்களில் 2.5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

23 Apr 2013

மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்

17 Apr 2013

ஆன்மீக செய்திகள்

11 Apr 2013

சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் நடை 10 மணி நேரம் அடைக்கப்படும்

07 Apr 2013

அகஸ்தீஸ்வரர் கோவிலில் லிங்கம் மீது சூரியஒளி விழும் அதிசயம்

25 Mar 2013

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு