tamilkurinji logo


 

பத்மநாபசுவாமி கோயில் ரத்தினங்களின் மதிப்பை கணக்கிட முடியாமல் மதிப்பீடு குழு திணறல்,pathmanaba swami temple

pathmanaba,swami,temple




பத்மநாபசுவாமி கோயில் ரத்தினங்களின் மதிப்பை கணக்கிட முடியாமல் மதிப்பீடு குழு திணறல்

First Published : Tuesday , 10th July 2012 07:15:33 PM
Last Updated : Tuesday , 10th July 2012 07:15:33 PM


பத்மநாபசுவாமி கோயில் ரத்தினங்களின் மதிப்பை கணக்கிட முடியாமல் மதிப்பீடு குழு திணறல்,pathmanaba swami temple

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் ஏ அறையில் உள்ள தங்க சங்கிலிகளில் பதிக்கப்பட்டுள்ள ரத்தினங்களின் மதிப்பை கண்டறிய முடியாமல் மதிப்பீட்டு குழுவினர் திணறி வருகின்றனர். திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் பல லட்சம் கோடி மதிப்புள்ள பொக்கிஷங்கள் இருப்பதாக கருதப்படும் ஏ ரகசிய அறை கடந்த வாரம் திறக்கப்பட்டது. இதில், 55 கிலோ எடையுள்ள தங்க அங்கிகள், 18 அடி நீளமுள்ள தங்க சங்கிலி மற்றும் ரத்தின மாலைகள், தங்க கிரீடங்கள் உள்பட  ஏராளமான அரிய பொக்கிஷங்கள் உள்ளன.

தற்போது, ரத்தின கற்கள் பதிக்கப்பட்ட தங்க சங்கிலிகளின் மதிப்பை கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று வரை 80 தங்க சங்கிலிகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு தங்க சங்கிலியிலும் உள்ளங்கை அளவுள்ள லாக்கெட்களில்  180 ரத்தின கற்கள் வரை பதிக்கப்பட்டுள்ளன. ஒரு சங்கிலியை பரிசோதிப்பதற்கே பல மணிநேரம் ஆகிறது. சங்கிலியில் பதிக்கப்பட்டுள்ள ரத்தின கற்கள் அனைத்தும்  மதிப்பீட்டு குழுவினர் எதிர்பார்த்ததை விட மிக பழமை வாய்ந்ததாக உள்ளது.

இவற்றின் மதிப்பை கண்டறிய முடியாமல் மதிப்பீட்டு குழுவினர் திணறி வருகின்றனர். இதனால் மிகவும் தாமதமாகவே கணக்கிடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
ரத்தினங்கள் பதிக்கப்பட்ட இதுபோன்ற தங்க சங்கிலிகள் எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் இந்த ரத்தின மாலைகளின் மதிப்பை கணக்கிடவே பல மாதங்களாகும் என தெரிகிறது.

பத்மநாபசுவாமி கோயில் ரத்தினங்களின் மதிப்பை கணக்கிட முடியாமல் மதிப்பீடு குழு திணறல்,pathmanaba swami temple பத்மநாபசுவாமி கோயில் ரத்தினங்களின் மதிப்பை கணக்கிட முடியாமல் மதிப்பீடு குழு திணறல்,pathmanaba swami temple பத்மநாபசுவாமி கோயில் ரத்தினங்களின் மதிப்பை கணக்கிட முடியாமல் மதிப்பீடு குழு திணறல்,pathmanaba swami temple
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.திருச்செந்தூர் முருகன் கோயிலின் தலபுராணப்படி, சூரபத்மனை முருகப் பெருமான் வதம் செய்த இடம் என்பதால்

மேலும்...

 மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்
மதுரை சித்திரை திருவிழாவில் வேதமந்திரங்கள் முழங்க மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நேற்று கோலாகலமாக நடந்தது. இன்று காலை நான்கு மாசிவீதிகளில் தோரோட்டம் நடைபெறுகிறது.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்.14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று  முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணத்திற்காக

மேலும்...

 சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் நடை 10 மணி நேரம் அடைக்கப்படும்
சந்திர கிரகணத்தை முன்னிட்டு வரும் 25ம் தேதி 10 மணி நேரம் ஏழுமலையான் கோயில் நடை  மூடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.திருப்பதி திருமலை தேவஸ்தானம் மற்றும் ஏராளமான கோயில்களில் சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் நடக்கும்போது கோயில் நடை சாத்தப்படுவது

மேலும்...

 26ம் தேதி தேரோட்டம் பங்குனி உத்திர திருவிழா பழநியில் கொடியேற்றம்
பழநி தண்டாயுதபாணி கோயில் பங்குனி உத்திர திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 26ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி நேற்று காலை 11.20 மணிக்கு மேல் 12 மணிக்குள் மிதுன லக்கினத்தில் திருஆவினன்குடி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in