நீட் தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் : சிபிஎஸ்இ அறிவிப்பு

நீட் தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் : சிபிஎஸ்இ அறிவிப்பு
மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளன. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலார் அனில் ஸ்வரூப் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) அடிப்படையில் நடைபெற்று வருகிறது.


இந்த ஆண்டு முதல் ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி (ஆயுஷ் - AYUSH) படிப்புகள் மற்றும் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கச் செல்பவருக்கும் நீட் தேர்வு கட்டாயமாக் கப்பட்டுள்ளது.

அதன்படி, நாடுமுழுவதும் 2018-19 கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு நேற்று நடந்தது. தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட 11 மொழிகளில் 136 நகரங்களில் 2,255 மையங்களில் நடந்த நீட் தேர்வை விண்ணப்பித்திருந்த 13 லட்சத்து 26,725 மாணவர்களில் சுமார் 90 சதவீதம் பேர் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல் தமிழகத்தில் 10 நகரங்களில் 170 மையங்களில் 1 லட்சத்து 7,288 மாணவர்களில், 1 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.

தமிழக அரசு மற்றும் பல் வேறு தனியார் அமைப்புகளின் உதவியால் மிகுந்த சிரமத்துக்கிடையே ரயில்கள், பேருந்துகளில் சென்று மாணவர்கள் தேர்வு எழுதினர்.

இந்நிலையில், நீர் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. முன்னதாக நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுவதாக இருந்தது. இதனை மாற்றி இன்று வெளியிட சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலார் அனில் ஸ்வரூப் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.
https://goo.gl/ShkuAU






17 Mar 2019

2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

06 Mar 2019

தேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி

06 Mar 2019

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு

19 Feb 2019

குடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை

19 Feb 2019

அ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி

06 Feb 2019

குப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது

03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்