நாளை பொது வேலைநிறுத்தம்: 10-ம் வகுப்பு செய்முறைத்தேர்வில் மாற்றம் இல்லை

நாளை பொது வேலைநிறுத்தம்: 10-ம் வகுப்பு செய்முறைத்தேர்வில் மாற்றம் இல்லை

பொது வேலைநிறுத்தத்தால், நாளை (புதன்கிழமை) தொடங்கும் 10-ம் வகுப்பு செய்முறைத்தேர்வில் எவ்வித மாற்றமும் இல்லை என்று அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி கூறினார்.

பிளஸ்-1 தேர்வு மார்ச் 1-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 27-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 12 வரை நடைபெற இருக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர்.

தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு 10-ம் வகுப்பு தேர்வில் அறிவியல் பாடத்தில் செய்முறைத்தேர்வு புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளது. இதற்கு 25 மதிப்பெண். எழுத்து தேர்வுக்கு (தியரி) 75 மதிப்பெண். செய்முறைத்தேர்வில் குறைந்தபட்சம் 15 மார்க்கும், தியரி தேர்வில் குறைந்தபட்சம் 20 மார்க்கும் எடுத்தால்தான் தேர்ச்சி பெற்றவர்களாக கருதப்படுவார்கள்.

10-ம் வகுப்புக்கான செய்முறைத்தேர்வு பிப்ரவரி 20-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நடத்தப்படும் என்று அரசு தேர்வுத்துறை ஏற்கனவே அறிவித்துவிட்டது. இதற்கிடையே, விலைவாசி உயர்வை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் 20, 21-ந்தேதிகளில் நாடு தழுவிய அளவில் பொது வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது.

இந்த சூழ்நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி 10-ம் வகுப்பு செய்முறைத்தேர்வு நாளை (புதன்கிழமை) தொடங்குமா? என்ற சந்தேகம் மாணவ-மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் எழுந்துள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவியிடம் கேட்டபோது, "செய்முறைத்தேர்வை 20-ந்தேதி முதல் 28-ந்தேதிக்குள் நடத்தி முடித்துவிட வேண்டும். இந்த இடைப்பட்ட நாட்களில்தேர்வை நடத்திவிடலாம். எனவே, பொது வேலை நிறுத்தத்தால், 10-ம் வகுப்பு செய்முறைத்தேர்வில் எந்த மாற்றமும் இல்லை" என்று தெரிவித்தார்.

https://goo.gl/9xj6Zf


05 Nov 2013

குழந்தைகளுக்கு படிப்பு வரவில்லையா?

04 Jun 2013

பொறியியல் கலந்தாய்வுக்கான ரேண்டம் நம்பர் வெளியீடு

03 May 2013

பொறியியல் சேர்க்கை விண்ணப்பங்கள் இன்று முதல் விநியோகம்

28 Apr 2013

டெல்லி பல்கலையில் சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

22 Apr 2013

பொறியியல் விண்ணாப்பங்கள் மே 4 முதல் வினியோகம்

25 Mar 2013

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது

19 Mar 2013

சில பள்ளிகளால் பெற்றோர் குழப்பம் முப்பருவ பாடத்திட்டத்தில் ஆண்டு இறுதித்தேர்வு எப்படி?

20 Feb 2013

ஆன்லைனில் செய்முறை பயிற்சி: சிபிஎஸ்இ அறிமுகம்

18 Feb 2013

நாளை பொது வேலைநிறுத்தம்: 10-ம் வகுப்பு செய்முறைத்தேர்வில் மாற்றம் இல்லை

11 Feb 2013

பிளஸ் 2 தேர்வை கண்காணிக்க 5000 பேர் கொண்ட பறக்கும் படை தயார்