tamilkurinji logo


 

நாளை ஆடிப்பெருக்கு: பெண்கள் சிறப்பு வழிபாடு,Aadiperukku

Aadiperukku




நாளை ஆடிப்பெருக்கு: பெண்கள் சிறப்பு வழிபாடு

First Published : Wednesday , 1st August 2012 04:37:07 AM
Last Updated : Wednesday , 1st August 2012 04:37:07 AM


நாளை ஆடிப்பெருக்கு: பெண்கள் சிறப்பு வழிபாடு,Aadiperukku

தமிழகத்தில் நாளை ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள், நீர் நிலைகளுக்கு சென்று புனித நீராடி சாமியை வழிபடுவர்.
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நாளை ஆடிப்பெருக்கையொட்டி ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கூடுவார்கள். அவர்கள் ஆற்றில் நீராடி, தங்கள் குல தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவார்கள். ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் காவிரி ஆறு பெருக்கெடுத்து ஓடும்.

ஆனால் இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால், நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

ஆடிப்பெருக்கை யொட்டி தர்மபுரி மாவட்டத்தில் நாளை (வியாழன்) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் 3 நாட்கள் நடைபெறும் ஆடிப்பெருக்கு விழா இன்று மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. இதில் அமைச்சர்கள் பழனியப்பன், கோகுல இந்திரா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
வறண்டு கிடக்கும் காவிரி வழக்கமாக  ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்கப்பட்டு, ஆடி மாதம் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு வரும்.  இந்த ஆண்டு தண்ணீர் சிறிதளவு தான் ஓடுகிறது.

ஆடிப்பெருக்கு விழா காவிரிக்கு நன்றி தெரிவிக்கும் வைபவமாக ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை கோலாகலமாக நடைபெறும். காவிரியில் அதிகாலை முதல் மாலை வரை பல லட்சம் பேர் நீராடுவார்கள். குறிப்பாக புதுமணத் தம்பதிகள் நாளை காவிரியில் நீராடி தங்கள் திருமணத்தின்போது அணிந்த மாலைகளை ஆற்று வெள்ளத்தில் விட்டு, தாலிப்பெருக்கு நிகழ்ச்சிகளை நடத்துவார்கள்.

காவிரி நதிக்கரைகளில் எல்லாம் இந்த விழா விமரிசையாக கொண்டாடப்பட்டாலும்,  ஒகேனக்கல், மேட்டூர், பவானி கூடுதுறை, ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம், கல்லணை, திருவையாறு ஆகிய இடங்களில் மிகவும் சிறப்பாக நடைபெறும்.

நாளை ஆடிப்பெருக்கு: பெண்கள் சிறப்பு வழிபாடு,Aadiperukku நாளை ஆடிப்பெருக்கு: பெண்கள் சிறப்பு வழிபாடு,Aadiperukku நாளை ஆடிப்பெருக்கு: பெண்கள் சிறப்பு வழிபாடு,Aadiperukku
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.திருச்செந்தூர் முருகன் கோயிலின் தலபுராணப்படி, சூரபத்மனை முருகப் பெருமான் வதம் செய்த இடம் என்பதால்

மேலும்...

 மகாளய அமாவாசை -பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு
ஒவ்வொரு புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும்  புனிதமான அமாவாசை ஆகும். தட்சனாயத்தில் வரும் முதல் அமாவாசையான  ஆடி அமாவாசை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதைவிட பல மடங்கு முக்கியத்துவம் பெறும் அமாவாசை புரட்டாசி அமாவாசை ஆகும். இந்த அமாவாசை நாள்

மேலும்...

 அற்புத பலன் தரும் ஆடி அமாவாசை
மதாந்தோறும் வரும் அமாவாசை தினமானது இறந்த நமது முன்னோர்களுக்கு  விரதம் இருக்க ஏற்ற நாளாகும்இவற்றில் ஆடி அமாவாசை தை அமாவாசை மகாளய அமாவாசை  முக்கியமானவை.  முன்றில் ஆடி அமாவாசை மிகவும் விசேஷமானது.ஆடி மாதத்தில் (தமிழ் மாதம்) கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்;

மேலும்...

 மகிமை நிறைந்த மகாளய அமாவாசை
சூரியன் கன்னி ராசிக்குள் செல்லும்போது, அதாவது புரட்டாசி மாதம், எமதர்மராஜன் பிதுர்க்களை பூமிக்கு அனுப்புவதாக ஐதீகம். அந்த நேரத்தில் நமது முன்னோர்களும் இறந்து போன ரத்தசம்பந்த உறவுகளும் அந்தந்த உறவினரைகுடும்பத்தினரை காண ஆசையுடனும், மகிழ்ச்சியுடனும் நம்மை காணவருவார்கள். அந்த நேரத்தில் அவர்களை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in