tamilkurinji logo


 

நாமக்கல் அருகே துண்டு, துண்டாக வெட்டி இளம்பெண் கொலை,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news




செய்திகள் >>> தமிழகம்

நாமக்கல் அருகே துண்டு, துண்டாக வெட்டி இளம்பெண் கொலை

First Published : Saturday , 10th February 2018 08:14:39 PM
Last Updated : Saturday , 10th February 2018 08:14:39 PM


நாமக்கல் அருகே துண்டு, துண்டாக வெட்டி இளம்பெண்  கொலை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

நாமக்கல் அருகே துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் கை, கால்கள் சாலையோரம் வீசப்பட்டு கிடந்தது.இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர். நாமக்கல் மாவட்டம் நல்லிகவுண்டன்புதூர் கிராமத்திலுள்ள பாலத்திற்கு அடியில் நேற்று காலை ஒரு சாக்கு மூட்டை கிடந்தது.

அதனருகில் இளம்பெண்ணின் கை, கால்கள் துண்டு, துண்டாக வெட்டப்பட்ட நிலையில் உள்ளே இருந்தது. சற்று தூரத்தில் 3 ஆடுகள் கொல்லப்பட்டு கிடந்தன. இதுகுறித்த தகவலின்பேரில், நல்லிபாளையம் போலீசார் சென்று, சாக்குமூட்டையை பிரித்து பார்த்தனர்.

அதில், 2 கால்களும், ஒரு கையும் இருந்தது. கையில் மருதாணி போட்ட அடையாளம் இருந்தது. மேலும், நெயில் பாலீசும் போடப்பட்டிருந்தது. அந்த உடல் பாகங்கள் சுமார் 25 முதல் 35 வயதுக்குள் இருக்கும் பெண்ணுடையது என்பது உறுதியானது.


கைப்பற்றப்பட்ட 2 கால்கள் மற்றும் கை ஆகியவை, உடலில் இருந்து மிகவும் துல்லியமாக, அளவு எடுத்து வெட்டியது போல் துண்டிக்கப்பட்டுள்ளது. கொலை செய்து 2 நாள் கழித்து, உடல் உறுப்புகளை தனியாக துண்டித்து குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்து, பின்னர், எடுத்து வந்து வீசிச்சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மருத்துவம் படிப்பவர்கள் மற்றும் டாக்டர்களின் உதவியோடு கை, கால்களை துண்டித்து இருக்கலாம் என்ற சந்தேகமும் வலுத்துள்ளது. போலீசாரின் கவனத்தை திசை திருப்பவே, அருகிலேயே 3 ஆடுகளை கொலை செய்து வீசி விட்டு சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.

இதுகுறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்குபதிந்து பெண்ணின் உடலை தேடி வருகின்றனர். பெண்ணை யாராவது கடத்தி வந்து, பாலியல் பலாத்காரம் செய்து கொன்றார்களா? அல்லது அவர் நரபலி கொடுக்கப்பட்டாரா? என்பது குறித்து விசாரிக்கின்றனர்.

நாமக்கல் அருகே துண்டு, துண்டாக வெட்டி இளம்பெண்  கொலை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
நாமக்கல் அருகே துண்டு, துண்டாக வெட்டி இளம்பெண்  கொலை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
நாமக்கல் அருகே துண்டு, துண்டாக வெட்டி இளம்பெண்  கொலை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சென்னை திரும்பிய விஜயகாந்த் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

மேலும்...

 அடையாறு, வேளச்சேரி,பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட திருடன் கைது
அடையாறு, வேளச்சேரி, கிண்டி பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த பிரபல திருடனை போலீசார்  கைது செய்தனர். அவரிடம் இருந்து 1.2 கிலோ தங்கம், ரூ.5 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை அடையாறு காவல் மாவட்டங்களான 

மேலும்...

 திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது: சைதாப்பேட்டை நீதிமன்றம்
தேச விரோத செயலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது என்று சைதாப்பேட்டை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சென்னையைச் சேர்ந்த திருமுருகன் காந்தி. இவர் ஜெனீவாவில் அண்மையில் நடைபெற்ற ஐ.நா.வின் மனித

மேலும்...

 ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ - சந்தனபெட்டியின் மீது வாசகம்
ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ என கருணாநிதி உடல் வைக்கப்பட்ட சந்தனபெட்டியின் மீது வாசகம் எழுதப்பட்டுள்ளது.5 முறை தமிழக முதல் அமைச்சராகவும் 50 ஆண்டு காலம் திமுக தலைவருமாக இருந்தவருமான கலைஞர் கருணாநிதி நேற்று (ஆகஸ்ட் 7) காலமானார். இந்திய

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in