தூத்துக்குடி சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகளை ரஜினி அடையாளம் காட்ட வேண்டும் : ஸ்டாலின்

தூத்துக்குடி சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகளை ரஜினி அடையாளம் காட்ட வேண்டும் : ஸ்டாலின்
தூத்துக்குடி கலவரத்திற்கு சமூக விரோதிகளே காரணம் என கூறும் நடிகர் ரஜினி, அவர்கள் யார் என்பதை நாட்டிற்கு அடையாளம் காட்ட வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்  சமூக விரோதிகளை, ரஜினி அடையாளம் காட்டுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றார்.

போராட்டம் இல்லாத வாழ்க்கையே இல்லை. தூத்துக்குடி கலவரம் தொடர்பான ரஜினியின்  குரல், பாரதிய ஜனதாவின் குரலா அல்லது அதிமுக-வின் குரலா என கேள்வி எழுப்பியுள்ளார். 


மேலும் பேசிய அவர் தமிழகத்திற்கு மறுக்கப்பட்ட ஜல்லிக்கட்டு உரிமையானது மாபெரும் போராட்டம் நடத்தி தான் பெறப்பட்டது என்பது ரஜினிக்கு நன்றாகவே தெரியும் என்றும் கூறினார்.

இதே போல ரஜினியின் கருத்துக்கு பதில் தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடக்கூடாது என்பதற்காகவே போராடி வருகிறோம் என்றார்.

தூத்துக்குடி போராட்டத்தில் ஊடுருவிய சமூக விரோதிகள் யார் என்பதை, நடிகர் ரஜினிகாந்த் தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக நேற்று தூத்துக்குடி சென்ற ரஜினிகாந்த், துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்து விட்டதாக ஆவேசமாக பேட்டியளித்தார்.

மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும், ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களின் குடியிருப்புகளை எரித்தது பொதுமக்கள் இல்லை, சமூக விரோதிகளே என்று என  ரஜினிகாந்த் குற்றம்சாட்டினார். அவரது இந்த கருத்துக்கு பொதுமக்கள் கடும் கண்டனத்தை சமூகவலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ரஜினியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
https://goo.gl/LFjZNg






18 Dec 2018

வீடு கட்ட லஞ்சம் கொடுக்க வேண்டுமா?- அதிகாரியிடம் போனில் பேசிய கமல்

14 Dec 2018

நான் உழைத்து முதல்வரானேன்: நீங்கள் அப்பாவின் தயவால் உயர்ந்துள்ளீர்கள்: ஸ்டாலின்மீது எடப்பாடி பாய்ச்சல்

14 Dec 2018

புயலால் 8 மீட்டர் வரை அலை எழும்பும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

14 Dec 2018

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்

13 Dec 2018

பள்ளியில் 5 மாணவிகள் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி

13 Dec 2018

கழிவறை கேட்டு தந்தை மீது புகார் தந்த 7 வயது சிறுமி.. ஆம்பூர் தூய்மை இந்தியா தூதுவரானார்

13 Dec 2018

காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் : வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு

13 Dec 2018

தினகரனை தவிர பிரிந்து சென்றவர்கள் யார் வேண்டுமானாலும் திரும்பி வரலாம் - முதல்வர் பகிரங்க அழைப்பு

11 Dec 2018

குடும்ப வறுமையில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை

11 Dec 2018

கூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு: கல்லூரி மாணவி பரிதாப மரணம்