tamilkurinji logo


 

தி.நகர் திருப்பதி தேவஸ்தானத்தில் நாளை அதிகாலை 2 மணி முதல் தரிசனம்,T.Nagar thiruppathi devasthanam dharsan

T.Nagar,thiruppathi,devasthanam,dharsan




தி.நகர் திருப்பதி தேவஸ்தானத்தில் நாளை அதிகாலை 2 மணி முதல் தரிசனம்

First Published : Sunday , 30th December 2012 08:36:45 PM
Last Updated : Sunday , 30th December 2012 08:36:45 PM


தி.நகர் திருப்பதி தேவஸ்தானத்தில் நாளை அதிகாலை 2 மணி முதல் தரிசனம்,T.Nagar thiruppathi devasthanam dharsan

தி.நகர் திருப்பதி தேவஸ்தானத்தில் புத்தாண்டு தினத்தில் அதிகாலை 2 மணி முதல் இரவு 10.30 மணி வரை சுவாமி தரிசனம் செய்யலாம் என்றும் மாற்றுத்திறனாளிகள் உடனடியாக தரிசனம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தி.நகர் திருமலை திருப்பதி தேவஸ்தானம் உள்ளூர் ஆலோசனை குழு தலைவர் கே.ஆனந்த குமார் ரெட்டி, துணை தலைவர் சுதந்திரன் ஆகியோர் நேற்று அளித்த பேட்டி:

புத்தாண்டு தினத்தில், தி.நகர் திருப்பதி தேவஸ்தானத்தில் சுவாமி தரிசனம் செய்ய பொதுமக்கள் அதிக அளவில் வருவார்கள். எனவே அதிகாலை 2 மணி முதல் இரவு 10.30 மணி வரை சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் அரை மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்வதற்கான சிறப்பு வசதிகள் செய்துள்ளோம்.
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைக்குழந்தைகளுடன் வருபவர்கள் காத்திருக்காமல் நேராக சுவாமி தரிசனம் செய்ய வசதி செய்துள்ளோம். திருப்பதியில் உள்ள அதே நடைமுறை கடைப்பிடிக்கப்படும்.

பக்தர்களுக்கு தீர்த்தம், சிறிய லட்டு மற்றும் பிரசாதம் வழங்கப்படும். மேலும், 25 விலையில் லட்டு விற்பனை செய்யப்படும். மேலும் பாக்கெட் காலண்டர், திருப்பதி புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும். போக்குவரத்து நெரிசலை சரிசெய்யவும், விரைவாக சாமி தரிசனம் செய்யவும் போலீசாரும் தன்னார்வலர்களும் உதவுவார்கள். கடந்த புத்தாண்டில் சுமார் 90 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்தனர். இந்த ஆண்டு 1 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். உள்ளூர் ஆலோசனை குழு உறுப்பினர்கள் பிரபாகர் ரெட்டி, மோகன்ராவ், கிருஷ்ணாராவ், கிருஷ்ணா, ராகவன், ஸ்ரீஹரி, சத்தியநாராயணா, கார்த்திக்கேயன் உடன் இருந்தனர்.

தி.நகர் திருப்பதி தேவஸ்தானத்தில் நாளை அதிகாலை 2 மணி முதல் தரிசனம்,T.Nagar thiruppathi devasthanam dharsan தி.நகர் திருப்பதி தேவஸ்தானத்தில் நாளை அதிகாலை 2 மணி முதல் தரிசனம்,T.Nagar thiruppathi devasthanam dharsan தி.நகர் திருப்பதி தேவஸ்தானத்தில் நாளை அதிகாலை 2 மணி முதல் தரிசனம்,T.Nagar thiruppathi devasthanam dharsan
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.திருச்செந்தூர் முருகன் கோயிலின் தலபுராணப்படி, சூரபத்மனை முருகப் பெருமான் வதம் செய்த இடம் என்பதால்

மேலும்...

 மகாளய அமாவாசை -பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு
ஒவ்வொரு புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும்  புனிதமான அமாவாசை ஆகும். தட்சனாயத்தில் வரும் முதல் அமாவாசையான  ஆடி அமாவாசை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதைவிட பல மடங்கு முக்கியத்துவம் பெறும் அமாவாசை புரட்டாசி அமாவாசை ஆகும். இந்த அமாவாசை நாள்

மேலும்...

 திருமலையில் மூன்று நாட்களில் 2.5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்
திருப்பதியில் ஏழுமலை யானை தரிசிக்க கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. நேற்று தர்ம தரிசனம் செய்யும் பக்தர்கள் தரிசனத்துக்கு நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்து நின்றனர். 64 கம்பார்ட்மெண்டுகளும் நிரம்பி வழிந்த நிலையில் ஏராளமான

மேலும்...

 மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்
மதுரை சித்திரை திருவிழாவில் வேதமந்திரங்கள் முழங்க மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நேற்று கோலாகலமாக நடந்தது. இன்று காலை நான்கு மாசிவீதிகளில் தோரோட்டம் நடைபெறுகிறது.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்.14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று  முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணத்திற்காக

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in