திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு

திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு
திருச்சி திருவானைக்காவலில் உள்ள ஜம்புகேஸ்வரர் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பஞ்சப்பூத திருத்தலங்களில் முதன்மையானதும், நீர்த்தலமாக விளங்கக்கூடியதுமாக இருப்பது திருவானைக்காவல் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் கோவில். இந்த கோவில் சைவத்திருத்தலங்களில் முதன்மையானது என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள ஏராளமான சிவபக்தர்கள் இங்கு வந்து வழிபடுவது வழக்கம். இங்கு கடந்த 2000-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவிலில் உள்ள ராஜகோபுரத்தில் உள்ள ஒரு சிறிய பகுதி இடிந்து விழுந்தது. கோபுரத்தில் சுவர் பகுதியில் ஆங்காங்கே மரம், செடிகள் வளர்ந்து வருகிறது. இதனால் மரங்களின் வேர்கள் சுவர் பகுதியில் ஊடுருவி செல்வதால், கோபுரங்களில் உள்ள சிலைகள் அவ்வப்போது இடிந்து விழுவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் நேற்று பகல் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில் உள்ள 5 கோபுரங்களில் 3-வதாக உள்ள கார்த்திகை கோபுரத்தின் உச்சி கலசத்துக்கு கீழ் சுமார் 10 அடி நீளமுள்ள ஒரு சிறிய பகுதி திடீரென்று இடிந்து விழுந்தது.

அது கோபுரத்தின் மூலையில் வைக்கப்பட்டு இருந்த நந்தி சிலையின் மீது பட்டதால், அதுவும் உடைந்து விழுந்தது. இதனை கண்ட அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக கோபுரத்தின் பக்கவாட்டு பகுதியில் சிலை உடைந்து விழுந்ததால், யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை.

இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த சிலர் கூறுகையில், "இந்த கோயிலுக்கு 1.7.2000 ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் 12 ஆண்டுகள் ஆகிவிட்டதால் மீண்டும் திருப்பணிகள் செய்து, உடனே கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் அதற்கான பணிகள் இன்னும் துவங்கவில்லை. இந்நிலையில் கோபுரங்களில் உள்ள சிற்பங்கள், பொம்மைகள், சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழ தொடங்கி விட்டன. மழை காலங்களில் கோபுரங்களின் அருகில் நிற்கவே பக்தர்களுக்கு பயமாக உள்ளது.  இச்சம்பவங்களை அப சகுணங்களாக கருத வேண்டியுள்ளது.  தாமதிக்காமல் திருப்பணிகளை உடனே துவக்க இந்து சமய அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

https://goo.gl/xwGKLK


28 Oct 2014

இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்

21 Sep 2014

மகாளய அமாவாசை -பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு

21 Jul 2014

அற்புத பலன் தரும் ஆடி அமாவாசை

24 Sep 2013

மகிமை நிறைந்த மகாளய அமாவாசை

08 Jun 2013

திருமலையில் மூன்று நாட்களில் 2.5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

23 Apr 2013

மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்

17 Apr 2013

ஆன்மீக செய்திகள்

11 Apr 2013

சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் நடை 10 மணி நேரம் அடைக்கப்படும்

07 Apr 2013

அகஸ்தீஸ்வரர் கோவிலில் லிங்கம் மீது சூரியஒளி விழும் அதிசயம்

25 Mar 2013

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு