திருவண்ணாமலை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் நாளை துவக்கம்

திருவண்ணாமலை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் நாளை துவக்கம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்திருவிழா 10 நாட்கள் நடக்கும். இந்த ஆண்டு திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

காலை 6.05 மணிக்கு மேல் 7.30 மணிக்குள், கோயில் சுவாமி சன்னதி முன்பு உள்ள 61 அடி உயர தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது.முதல் நாளான நாளை பகலில் பஞ்சமூர்த்திகள் கண்ணாடி வாகனத்திலும், இரவில் பஞ்சமூர்த்திகள் மூஷிகம், மயில், வெள்ளி அதிகார நந்தி, ஹம்சம், சிம்ம வாகனத்திலும் பவனி வருகிறார்கள்.விழாவின் 6ம் நாளான (23ம் தேதி) பகலில் 63 நாயன்மார்கள் ஊர்வலமும், அன்று இரவு வெள்ளிரத ஊர்வலமும் நடக்கிறது.

7ம் நாளான 24ம் தேதி (சனி) தேர்த்திருவிழா நடக்கிறது. அன்று விநாயகர், முருகன், அண்ணாமலையார், அம்மன், சண்டிகேஸ்வரர் தேர்கள் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள். இதில் அம்மன் தேரை பெண்களே இழுத்து வருவார்கள்.

விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபத்திருவிழா, 10ம் நாளான 27ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோயிலுக்குள் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறமுள்ள 2,668 அடி உயர மலையில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது. சுமார் 20 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருவண்ணாமலையில் 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்படுகிறது. 1,200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
https://goo.gl/auMPfj


28 Oct 2014

இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்

21 Sep 2014

மகாளய அமாவாசை -பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு

21 Jul 2014

அற்புத பலன் தரும் ஆடி அமாவாசை

24 Sep 2013

மகிமை நிறைந்த மகாளய அமாவாசை

08 Jun 2013

திருமலையில் மூன்று நாட்களில் 2.5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

23 Apr 2013

மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்

17 Apr 2013

ஆன்மீக செய்திகள்

11 Apr 2013

சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் நடை 10 மணி நேரம் அடைக்கப்படும்

07 Apr 2013

அகஸ்தீஸ்வரர் கோவிலில் லிங்கம் மீது சூரியஒளி விழும் அதிசயம்

25 Mar 2013

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு