tamilkurinji logo


 

திருவண்ணாமலையில் புரட்டாசி முதல் சனிக்கிழமை உற்சவம்,
திருவண்ணாமலையில் புரட்டாசி முதல் சனிக்கிழமை உற்சவம்

First Published : Monday , 1st October 2012 06:41:43 PM
Last Updated : Monday , 1st October 2012 06:41:43 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

திருவண்ணாமலையில் புரட்டாசி முதல் சனிக்கிழமை உற்சவம்,

ஸ்ரீவில்லிபுத்தூர், அருள்மிகு ஆண்டாள் திருக்கோயிலுடன் இணைந்த திருவண்ணாமலை அருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை உற்சவம் நடைபெற்றது.

வில்லிபுத்தூருக்கு வடமேற்கில் சுமார் 3 கி.மீ. தொலைவில் திருவண்ணாமலை என்னும் திருத்தலம் அமைந்துள்ளது. மலையின் மேல் கோயிலில் ஸ்ரீனிவாசப் பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இதனை மக்கள் தென்திருப்பதி என்றும் அழைப்பார்கள்.

திருவண்ணாமலையில் திருக்கைகளை திருவடியைக் காட்டியவாறும், அவ்வாறே அவரின் திருவடியை சரணடைந்த பக்தர்கள் தங்கள் துன்பத்தை முழங்கால் அளவு வெள்ளத்தைக் கடப்பது போல எளிதாக கடந்து விடுவார்கள் என்பதை உணர்ந்த மற்றொரு கரத்தை திருத்தொடையில் பொருத்தியும், இரு கரங்களிலும் சக்கரமும், சங்கும் ஏந்தியும், திருமார்பில் மகாலட்சுமியுடனும், உயர்ந்த கிரீடம் தரித்து, கருணை பொங்கும் கண்களுடனும், அழகிய புன்முறுவலுடனும், இடையில் வாளுடன் எட்டடி உயரத்தில் கம்பீரமாக நிற்கிறார்.

இம்மலை மேல் ஏறுவதற்கு வசதியாக 240 படிக்கட்டுகள் உள்ளன. மலையின் அடிவாரத்தில் கோனேரி என்னும் குளம் அமைந்துள்ளது. திருப்பதி திருவேங்கடமுடையானுக்கு செலுத்த வேண்டிய பிரார்த்தனைகளை இவருக்கு செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றுவதால் இக்கோயில் தென்திருப்பதி என்றும் போற்றப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் புரட்டாசி சனி வாரங்களில் உற்சவம் நடைபெறும். இதனையொட்டி அதிகாலை திருமஞ்சனம், காலசந்தி பூஜை நடைபெற்றது. நண்பகல் உச்சிகால பூஜையும் இரவு சாயரட்சை பூஜையும் நடைபெற்றது.

திருவண்ணாமலையில் புரட்டாசி முதல் சனிக்கிழமை உற்சவம், திருவண்ணாமலையில் புரட்டாசி முதல் சனிக்கிழமை உற்சவம், திருவண்ணாமலையில் புரட்டாசி முதல் சனிக்கிழமை உற்சவம்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மகாளய அமாவாசை -பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு
ஒவ்வொரு புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும்  புனிதமான அமாவாசை ஆகும். தட்சனாயத்தில் வரும் முதல் அமாவாசையான  ஆடி அமாவாசை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதைவிட பல மடங்கு முக்கியத்துவம் பெறும் அமாவாசை புரட்டாசி அமாவாசை ஆகும். இந்த அமாவாசை நாள்

மேலும்...

 மகிமை நிறைந்த மகாளய அமாவாசை
சூரியன் கன்னி ராசிக்குள் செல்லும்போது, அதாவது புரட்டாசி மாதம், எமதர்மராஜன் பிதுர்க்களை பூமிக்கு அனுப்புவதாக ஐதீகம். அந்த நேரத்தில் நமது முன்னோர்களும் இறந்து போன ரத்தசம்பந்த உறவுகளும் அந்தந்த உறவினரைகுடும்பத்தினரை காண ஆசையுடனும், மகிழ்ச்சியுடனும் நம்மை காணவருவார்கள். அந்த நேரத்தில் அவர்களை

மேலும்...

 சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் நடை 10 மணி நேரம் அடைக்கப்படும்
சந்திர கிரகணத்தை முன்னிட்டு வரும் 25ம் தேதி 10 மணி நேரம் ஏழுமலையான் கோயில் நடை  மூடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.திருப்பதி திருமலை தேவஸ்தானம் மற்றும் ஏராளமான கோயில்களில் சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் நடக்கும்போது கோயில் நடை சாத்தப்படுவது

மேலும்...

 அகஸ்தீஸ்வரர் கோவிலில் லிங்கம் மீது சூரியஒளி விழும் அதிசயம்
விண்ணம்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவிலில் லிங்கம் மீது சூரிய ஒளி விழுந்தது. அப்போது பக்தர்கள் ‘நமச்சிவாய’ என்று கோஷமிட்டனர்.வேலூர் மாவட்டம், சேர்க்காடு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கும், வள்ளிமலை கோவிலுக்கும் மத்தியில் அமைந்துள்ளது விண்ணம்பள்ளி கிராமம். இந்த கிராமத்தில் தான் 12–வது நூற்றாண்டில் சோழர் காலத்தில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in