tamilkurinji logo


 

திருவண்ணாமலையில் நாளை மகாதீபம்,Thiruvannamalai deepam

Thiruvannamalai,deepam




திருவண்ணாமலையில் நாளை மகாதீபம்

First Published : Monday , 26th November 2012 07:13:31 AM
Last Updated : Monday , 26th November 2012 07:13:31 AM


திருவண்ணாமலையில் நாளை மகாதீபம்,Thiruvannamalai deepam

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 18ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபத்திருவிழா நாளை நடைபெறுகிறது. அதிகாலை 4 மணியளவில் அண்ணாமலையார் கோயிலில் 2ம் பிரகாரத்தில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அதனை தொடர்ந்து, மாலை 6 மணியளவில் 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. மகா தீபத்துக்கான 3.5 டன் நெய் மற்றும் ஆயிரம் மீட்டர் திரி (காடா துணி) ஆகியவை தயார் நிலையில் உள்ளது. இது நாளை காலை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்படும். முன்னதாக இன்று அதிகாலை மகா தீப கொப்பரைக்கு அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அதன்பின்னர் தீபம் ஏற்றும் முறைதாரர்களான பர்வதராஜ குல மரபினர் தலைச்சுமையாக மலை உச்சிக்கு கொண்டு சென்றனர். அங்கு நாளை அதிகாலை மகா தீப கொப்பரை நிலை நிறுத்தப்படும்.

மகா தீபத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர். கூட்ட நெரிசலை தடுக்க இரும்பு கம்பி வேலிகளை போலீசார் அமைத்துள்ளனர். ஏடிஜிபி (சட்டம்&ஒழுங்கு) ராஜேந்திரன் மேற்பார்வையில் வடக்கு மண்டல ஐஜி கண்ணப்பன் தலைமையில் 6 டிஐஜிக்கள், 14 எஸ்பிக்கள் உள்பட 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் 244 கமாண்டோ வீரர்கள் இன்று தி.மலைக்கு வந்துள்ளனர். இந்த ஆண்டு முதல்முறையாக ஆளில்லாத சிறிய ரக விமானம் மூலம் கண்காணிப்பு பணியும் மேற்கொள்ளப்படுகிறது.


திருவண்ணாமலையில் நாளை மகாதீபம்,Thiruvannamalai deepam திருவண்ணாமலையில் நாளை மகாதீபம்,Thiruvannamalai deepam திருவண்ணாமலையில் நாளை மகாதீபம்,Thiruvannamalai deepam
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு
இந்த மாதம் பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.அதன் விவரம் வருமாறு:–இந்த மாதத்திற்கான பவுர்ணமி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4.45 மணிக்கு தொடங்கி நாளை (புதன்கிழமை) மாலை 3.55 மணி வரை உள்ளது. இந்த

மேலும்...

 சபரிமலையில் நாளை மகரவிளக்கு பூஜை
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜை நாளை நடைபெறுகிறது. மாலை 6.30க்கு பொன்னம்பலமேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவில் காட்சியளிக்கிறார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை குறிப்பிடத்தக்கதாகும். கடந்த மாதம் 26ம் தேதி மண்டல

மேலும்...

 தி.நகர் திருப்பதி தேவஸ்தானத்தில் நாளை அதிகாலை 2 மணி முதல் தரிசனம்
தி.நகர் திருப்பதி தேவஸ்தானத்தில் புத்தாண்டு தினத்தில் அதிகாலை 2 மணி முதல் இரவு 10.30 மணி வரை சுவாமி தரிசனம் செய்யலாம் என்றும் மாற்றுத்திறனாளிகள் உடனடியாக தரிசனம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தி.நகர் திருமலை திருப்பதி தேவஸ்தானம் உள்ளூர் ஆலோசனை குழு

மேலும்...

 சபரிமலை நடை 26ம் தேதி அடைப்பு
மண்டல பூஜை முடிந்து, சபரிமலை நடை, வரும், 26ம் தேதி இரவு, 10:00 மணிக்கு அடைக்கப்படும். மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக, 30ம் தேதி மாலை திறக்கப்படும்.சபரிமலை அய்யப்பன் கோவிலில், நவ., 16ம் தேதி துவங்கிய மண்டல காலம், நிறைவு கட்டத்தை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in