திருவண்ணாமலையில் உள்வட்ட பாதையில் கிரிவலம் செல்ல தடை

திருவண்ணாமலையில் உள்வட்ட பாதையில் கிரிவலம் செல்ல தடை
திருவண்ணாமலை கிரிவலம் மிகவும் பிரசித்தி பெற்றது. மகாதீபம் ஏற்றப்படும் 2,668 அடி உயர மலையைச் சுற்றிலும், 14 கி.மீ. தூரத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் நடந்து கிரிவலம் செல்கின்றனர். மேலும், மலையையொட்டி வனப்பகுதிக்குள் அமைந்துள்ள ஒற்றையடி பாதையான உள்வட்ட பாதை வழியாகவும் பக்தர்கள் கிரிவலம் செல்வதும் வழக் கம். உள்வட்டப் பாதை அமைந்துள்ள பகுதி முழுவதும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காப்புக்காடு (ரிசர்வ் பாரஸ்ட்) பகுதியாகும்.

இந்நிலையில், உள்வட்ட பாதை வழியாக பக்தர்கள் கிரிவலம் செல்ல வும், காப்புக்காடு பகுதிகளுக்குள் பொதுமக்கள் செல்லவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இது தொடர்பாக, திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் வீ.நாகநாதன் அளித்த பேட்டி:

திருவண்ணாமலை மலையை சுயம்பு வடிவான சிவனாக பக்தர்கள் வழிபடுகின்றனர். எனவே, மலை யின் புனிதத்தையும், வளத்தையும், பசுமையையும் பாதுகாப்பதும், மனிதர் களால் மலைக்கு ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதும் அவசியம். மலை யின் இயற்கை சூழலை பாதுகாப்பதுதான் உண்மையான ஆனமிகம். எனவே, உள்வட்ட பாதை வழியாக கிரிவலம் செல்வதற்கும், காப்புக்காடு பகுதிக்குள் ஆட்கள் நுழைவதற்கும் தடை விதித்திருக் கிறோம்.

காப்புக்காடு பகுதிக்குள் நுழைவது சட்டப்படி தவறு. கிரிவலப்பாதையில் 50 இடங்களில் ‘தடைச் செய்யப்பட்ட காப்புக்காடு பகுதி, மீறினால் தண்டனை‘ என்ற வாசகங்கள் அடங்கிய எச்சரிக்கை போர்டுகள் விரைவில் வைக்கப்படும். தடையை மீறி உள்வட்ட கிரிவலப்பாதையிலும், காப்புக்காடு பகுதியிலும் செல்வோருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
https://goo.gl/TYuxGx


28 Oct 2014

இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்

21 Sep 2014

மகாளய அமாவாசை -பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு

21 Jul 2014

அற்புத பலன் தரும் ஆடி அமாவாசை

24 Sep 2013

மகிமை நிறைந்த மகாளய அமாவாசை

08 Jun 2013

திருமலையில் மூன்று நாட்களில் 2.5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

23 Apr 2013

மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்

17 Apr 2013

ஆன்மீக செய்திகள்

11 Apr 2013

சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் நடை 10 மணி நேரம் அடைக்கப்படும்

07 Apr 2013

அகஸ்தீஸ்வரர் கோவிலில் லிங்கம் மீது சூரியஒளி விழும் அதிசயம்

25 Mar 2013

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு