tamilkurinji logo


 

திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது: சைதாப்பேட்டை நீதிமன்றம்,Human rights activist Thirumurugan Gandhi arrested

Human,rights,activist,Thirumurugan,Gandhi,arrested




செய்திகள் >>> தமிழகம்

திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது: சைதாப்பேட்டை நீதிமன்றம்

First Published : Friday , 10th August 2018 08:45:09 PM
Last Updated : Friday , 10th August 2018 08:45:09 PM


திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது: சைதாப்பேட்டை நீதிமன்றம்,Human rights activist Thirumurugan Gandhi arrested

தேச விரோத செயலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது என்று சைதாப்பேட்டை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சென்னையைச் சேர்ந்த திருமுருகன் காந்தி. இவர் ஜெனீவாவில் அண்மையில் நடைபெற்ற ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.


அதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியானது குறித்தும், சென்னை-சேலம் பசுமை வழிசாலைத் திட்டம் குறித்தும் பேசினாராம்.


திருமுருகன்காந்தியின் இந்தப் பேச்சு, மே 17 இயக்கத்தின் முகநூல் பக்கத்தில் விடியோ காட்சியாக வெளியிடப்பட்டிருந்தது.

இதில் திருமுருகன்காந்தி அரசுக்கு எதிராக சில கருத்துகளை கூறியிருந்தாராம். இந்நிலையில் இந்த விடியோ காட்சியைப் பார்த்த சென்னை குரோம்பேட்டை நியூ காலனியைச் சேர்ந்த க.மதன்குமார் என்பவர், சென்னை பெருநகர காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவில் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை செய்தனர். விசாரணையில், திருமுருகன்காந்தி அரசுக்கு எதிரான பேசியது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அரசுக்கு எதிராக பொதுமக்களிடையே பகை ஊட்டும் வகையில், தேச விரோதச் செயலில் ஈடுபட்டதாகவும், உள்நோக்கத்தோடு கலகத்தை ஏற்படுத்த திட்டமிட்டதாகவும், இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்த முயற்சித்ததாகவும் 3 சட்டப் பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், ஜெனீவாவில் இருந்து திருமுருகன்காந்தி இந்தியாவுக்கு திரும்பி வரும்போது, அவரைக் கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை சைபர் குற்றப் பிரிவு போலீஸார் எடுத்தனர். இதன் ஒரு பகுதியாக திருமுருகன்காந்தி, தேடப்படுவோர் பட்டியலில் இருப்பதாக நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு சைபர் குற்றப் பிரிவு போலீஸார் 'லுக் அவுட்' நோட்டீஸ் அளித்தனர்.

இந்நிலையில் ஜெனீவாவில் இருந்து விமானம் மூலம் பெங்களூருக்கு வியாழக்கிழமை அதிகாலை திருமுருகன்காந்தி வந்தார்.

அப்போது அவர் தேடப்படுவோர் பட்டியலில் இருப்பதைப் பார்த்த குடியுரிமைத் துறை அதிகாரிகளும், சுங்கத் துறை அதிகாரிகளும் திருமுருகன் காந்தியை கைது செய்து, பெங்களூரு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

பெங்களூரு போலீஸாரால் திருமுகன் காந்தி கைது செய்யப்பட்டது குறித்து, சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த சைபர் குற்றப்பிரிவு போலீஸார், பெங்களூரு சென்று திருமுருகன் காந்தியை சென்னைக்கு அழைத்து வந்தனர்.

வெள்ளியன்று காலை எழும்பூர் நீதிமன்ற நீதிபதியை இல்லத்தில் அவரை ஆஜர் படுத்த போலீசார் முயன்றனர்.ஆனால் அவரை நீதிமன்றத்தில்தான் ஆஜர் செய்ய வேண்டும் என்று நீதிபதி கண்டிப்பாக கூறி விட்டார்.

இதையடுத்து அவரை சென்னை சைதாப்பேட்டை 11-ஆவது நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின் நீதிபதி திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது என்று தெரிவித்து விட்டார். அதே சமயம் திருமுருகன் காந்தியிடம் 24 மணி நேரம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தலாம் என்றும், அதற்கு திருமுருகன் காந்தி முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது: சைதாப்பேட்டை நீதிமன்றம்,Human rights activist Thirumurugan Gandhi arrested திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது: சைதாப்பேட்டை நீதிமன்றம்,Human rights activist Thirumurugan Gandhi arrested திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது: சைதாப்பேட்டை நீதிமன்றம்,Human rights activist Thirumurugan Gandhi arrested
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பழனி உற்சவர் சிலை முறைகேடு : இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா கைது
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள சோமஸ்கந்தர் சிலை செய்ததில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டிருக்கிறார். காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஏகாம்பரநாதர் ஏலவார் குழலி உடனுறை சோமாஸ்கந்தர் அருள்பாலிக்கிறார்.இந்த சோமாஸ்கந்தர்

மேலும்...

 பாலியல் தொல்லை கொடுத்த கார் டிரைவர் மதுவில் விஷம் கலந்து கொலை
 பாலியல் தொல்லை தந்த கார் டிரைவர் மதுவில் விஷம் கலந்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது கள்ளக்காதலி மற்றும் நண்பரை போலீசார் கைது செய்தனர்.  சென்னை மதுரவாயல், ஓம்சக்தி நகர், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (36). கால்டாக்சி

மேலும்...

 கள்ளக்காதல் விபரீதம் சிறுவனுக்கு தூக்க மாத்திரைகளை கொடுத்து கழுத்தை நெரித்துக்கொன்ற தாய்
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அடுத்த சோழங்கபுரத்தை சேர்ந்தவர் வீரமணி. இவரது மனைவி மீனா என்ற மீனாம்பாள்(40). இவர்களுக்கு அங்குராஜ்(13) என்ற மகன் உள்ளார். வீரமணி இறந்து விட்டதால் சாந்தாபுரம் பகுதியில் குடியிருந்து வந்தார். சாந்தாபுரம் அருகில் உள்ள சோமரசம்பேட்டை பள்ளியில் 9ம்

மேலும்...

 11 வயது மாணவிக்கு போதை ஊசி போட்டு பாலியல் பலாத்காரம் செய்த 17 பேர் கைது
சென்னையில் 11 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டனர்.சென்னை அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலையில், பிரபல அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தான் 11 வயது சிறுமியை கற்பழித்த கொடூர காட்சிகள் அரங்கேறியுள்ளது.11 வயது,

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in