tamilkurinji logo


 

திருப்பூர் தொழில் அதிபர் கடன் தொல்லையால் தற்கொலை,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> தமிழகம்

திருப்பூர் தொழில் அதிபர் கடன் தொல்லையால் தற்கொலை

First Published : Tuesday , 10th July 2018 12:29:18 PM
Last Updated : Tuesday , 10th July 2018 12:39:18 PM


திருப்பூர் தொழில் அதிபர் கடன் தொல்லையால் தற்கொலை,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

திருப்பூர் பாளையகாடு காயத்ரி நகரை சேர்ந்தவர் அண்ணாமலை (52). தொழில் அதிபர். தனியாக நிறுவனம் நடத்தி வந்தார். மேலும் மொத்தமாக நூல்களை வாங்கி விற்பனை செய்தும் வந்தார்.

இவருக்கு சிகப்பி என்ற மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

நேற்று மதியம் தொழில் அதிபர் அண்ணாமலை வெளியே சென்று வருவதாக கூறி விட்டு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மனைவி சிகப்பி கணவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டார்.

அப்போது சுவிட்ச் ஆப் என வந்தது. இது குறித்து உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்தனர். பல்வேறு இடங்களில் அண்ணாமலையை தேடினார்கள்.

அண்ணாமலை தனது வீட்டின் அருகே குடோன் நடத்தி வந்தார். அங்கு சென்று பார்த்த போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இதனை பார்த்த அண்ணாமலை குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் அண்ணாமலை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொழில் அதிபர் தற்கொலை செய்த இடத்தில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது அண்ணாமலை எழுதி வைத்து இருந்த கடிதம் சிக்கியது.

அதில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ரூ. 50 லட்சம் வரை கடன் வாங்கி உள்ளேன். அதனை திருப்பி செலுத்த முடியவில்லை. மேலும் தன்னிடம் நூல் வாங்கி சென்றவர்கள் ரூ. 40 லட்சம் வரை பாக்கி வைத்துள்ளனர்.

அந்த பணத்தை அவர்கள் திருப்பி தராததால் கடனை திரும்ப செலுத்த முடியவில்லை என எழுதி வைத்துள்ளார்.

நூல் வாங்கிய வகையில் தனக்கு யார்?யார்? பணம் தர வேண்டும் என்பது குறித்து அவர்களின் பெயர், தர வேண்டிய தொகை ஆகியவற்றையும் எழுதி வைத்து இருக்கிறார்.

இது தொடர்பாக அண்ணாமலை தனது சங்கமான யான் உற்பத்தியாளர் சங்கத்துக்கும் கடிதம் அனுப்பி இருப்பதாக அதில் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் திருப்பூரில் கடன் தொல்லை, தொழில் நஷ்டம் காரணமாக தொழில் அதிபர்கள் 4 பேர் தற்கொலை செய்து உள்ளனர்.

இந்த சம்பவம் தொழில் அதிபர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் தொழில் அதிபர் கடன் தொல்லையால் தற்கொலை,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema திருப்பூர் தொழில் அதிபர் கடன் தொல்லையால் தற்கொலை,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema திருப்பூர் தொழில் அதிபர் கடன் தொல்லையால் தற்கொலை,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கர்ப்பிணி பெண்ணை கொலைசெய்து நாடகமாடிய கணவன் கைது
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அருகே உள்ள அருதங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 38). இவரது மனைவி புஷ்பா (28). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு பெனித்தா (2) என்ற பெண் குழந்தை உள்ளது. தற்போது புஷ்பா 5

மேலும்...

 2வது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்- அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும், சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும், 3-ம் நபர் காப்பீடு கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய சரக்கு போக்குவரத்து

மேலும்...

 பேஸ்புக் காதலால் ரோட்டில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளபட்ட 11ஆம் வகுப்பு மாணவி
மேற்குவங்க மாநிலம் டார்ஜ்லிங்கை சேர்ந்தவர்  11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், ஃபேஸ்புக் மூலம் ஓட்டலில் வேலை செய்யும் இளைஞருடன் பழகி வந்தார். இருவரும் சேட்டிங் மூலம் காதலை வளர்த்து வந்தனர். ஒரு கட்டத்தில் இருவரும் மொபைல் நம்பர்களை பகிர்ந்து

மேலும்...

 திருமணமான 5 நாளில் கணவரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய இளம்பெண்
மற்ற பெண்களுடன் உள்ள தொடர்பை மறைத்துத் திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரமடைந்த மனைவி, கணவனை பட்டப்பகலில் கோயில் வளாகத்தில் வைத்துத் தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.கோவை சாய்பாபா கோயிலுக்கு நேற்று சாமி தரிசனம் செய்ய புதுமணத் தம்பதிகள் வந்தனர். அப்போது

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in