திருப்பதி பட்டு அணிந்து திருவில்லியில் ஆண்டாள் காட்சி

திருப்பதி பட்டு அணிந்து திருவில்லியில் ஆண்டாள் காட்சி
திருப்பதி கோயிலில் இருந்து அனுப்பி வைத்த மஞ்சள் நிற பட்டுப் புடவையை அணிந்து, திருவில்லிபுத்தூரில் ஆண்டாள், ரெங்க மன்னாருடன் காட்சியளித்தார். இதனை ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் தரிசித்தனர்.

திருப்பதியில் நடை பெற்ற பிரமோற்சவ விழாவில், சீனிவாச பெருமாள் அணிந்து கொள்வதற்காக, திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து சில வாரங்களுக்கு முன்பு ஆண்டாள் சூடிய மாலை அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மாலையை அணிந்து, பிரமோற்சவ விழாவின் 5ம் நாளில் பெருமாள் காட்சியளித்தார். அதேபோல் திருப்பதியில் இருந்து பச்சை பார்டருடன் கூடிய மஞ்சள் நிற பட்டுப்புடவை மற்றும் 2 வெண் குடைகள் திருவில்லிபுத்தூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இவை ஆண்டாள் கோயில் அர்ச்சகர் கிச்சப்பன் என்பவரது வீட்டில் ஒரு வாரமாக வைத்து பூஜை செய்யப்பட்டு வந்தது.வெள்ளிக் கிழமையான நேற்று முன்தினம் ஆண்டாள், ரெங்கமன்னார் ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதனிடையே கோயில் நிர்வாகத்தினர் அர்ச்சகர் வீட்டிற்கு சென்று திருப்பதி பட்டுப்புடவை, குடைகளை மேளதாளம் முழங்க கோயிலுக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் விசேஷ பூஜைகள் நடத்தி பட்டுப் புடவை ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டது. பட்டுப்புடவையுடன் ஊஞ்சலில் அமர்ந்து ஆண்டாள் காட்சியளித்த நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் தரிசித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன் செய்திருந்தனர்.
https://goo.gl/QzXBc4


28 Oct 2014

இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்

21 Sep 2014

மகாளய அமாவாசை -பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு

21 Jul 2014

அற்புத பலன் தரும் ஆடி அமாவாசை

24 Sep 2013

மகிமை நிறைந்த மகாளய அமாவாசை

08 Jun 2013

திருமலையில் மூன்று நாட்களில் 2.5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

23 Apr 2013

மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்

17 Apr 2013

ஆன்மீக செய்திகள்

11 Apr 2013

சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் நடை 10 மணி நேரம் அடைக்கப்படும்

07 Apr 2013

அகஸ்தீஸ்வரர் கோவிலில் லிங்கம் மீது சூரியஒளி விழும் அதிசயம்

25 Mar 2013

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு