திருப்பதி கோயிலில் 5ம் நாள் பிரம்மோற்சவம் இன்று இரவு கருடசேவை

திருப்பதி கோயிலில் 5ம் நாள் பிரம்மோற்சவம் இன்று இரவு கருடசேவை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 5ம் நாள் உற்சவத்தையொட்டி இன்று காலை மோகினி அவதாரத்தில் மலையப்பசுவாமி பவனி வந்தார். இன்று இரவு கருடசேவை நடக்கிறது. திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 4ம் நாளான நேற்று காலை மலையப்பசுவாமி கல்ப விருட்ச வாகனத்தில் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து நேற்றிரவு சர்வ பூபாள வாகனத்தில் மலையப்பசுவாமி மாட வீதிகளில் பவனி வந்தார். பிரம்மோற்சவத்தின் 5ம் நாளான இன்று காலை மோகினி அலங்காரத்தில் மலையப்பசுவாமி பவனி வந்தார். ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆண்டாள் சூடிய மாலையுடன்  பக்தர்களுக்கு காட்சியளித்தார். இன்று இரவு 8.30 மணிக்கு பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை நடக்கிறது.

திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ரோம் நாட்டு மன்னர்கள், கர்நாடக மன்னர்களான பாலக கங்கா நாயக், விஷ்ணுவர்தன், ஸ்ரீ கிருஷ்ண தேவராயர் ஆகியோர் கொடுத்த 60 நாணயங்கள், திப்பு சுல்தான், ஐதர் அலி, கிழக்கு இந்திய கம்பெனி வெளியிட்ட சிறப்பு நாணயங்கள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்பா சுவாமி நாணயங்கள் மற்றும் விலை உயர்ந்த வைரம், வைடூரியம் ஆபரண பொருட்கள், நகாபரணம், மகரகுண்டலங்கள், பச்சை ஆரம், கிரிடங்கள் உள்ளிட்ட பழமை வாய்ந்த ஆபரணங்கள் தற்போது திருப்பதி தேவஸ்தான கஜானாவில் உள்ளது.  திருமலையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா அருங்காட்சியகத்தில் ஆபரணங்கள் மற்றும் நாணயங்களை கண்காட்சி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
https://goo.gl/v8uwYx






28 Oct 2014

இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்

21 Sep 2014

மகாளய அமாவாசை -பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு

21 Jul 2014

அற்புத பலன் தரும் ஆடி அமாவாசை

24 Sep 2013

மகிமை நிறைந்த மகாளய அமாவாசை

08 Jun 2013

திருமலையில் மூன்று நாட்களில் 2.5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

23 Apr 2013

மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்

17 Apr 2013

ஆன்மீக செய்திகள்

11 Apr 2013

சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் நடை 10 மணி நேரம் அடைக்கப்படும்

07 Apr 2013

அகஸ்தீஸ்வரர் கோவிலில் லிங்கம் மீது சூரியஒளி விழும் அதிசயம்

25 Mar 2013

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு