திருப்பதி கோயிலில் பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருப்பதி கோயிலில் பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். ஏழுமலையானை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகின்றனர். அவர்கள்  திருமலையில் வைகுண்டம் வளாகத்தில் உள்ள 31 அறைகளில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். சனி, ஞாயிறு என தொடர்ந்து 2 நாட்கள் அரசு விடுமுறை என்பதால், திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

நேற்று முன்தினம் வைகுண்டம் வளாகத்தில் உள்ள 31 அறைகளும் நிரம்பி, ஒன்றரை கிமீ தூரத்துக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றனர். இலவச தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க 18 மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால் நேற்று பிற்பகல் முதல் ரூ.300க்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் வழங்காமல் நிறுத்தப்பட்டது.  

பக்தர்கள் தரிசனத்துக்கு நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதால், அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் தேவஸ்தான அதிகாரிகள் செய்து வருகின்றனர். மேலும், தரிசனம் முடிந்த பக்தர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல திருமலை பஸ் நிலையத்தில் போதிய பஸ்கள் இல்லாததால் நீண்ட நேரம் காத்திருந்து சென்றனர்.
https://goo.gl/f18i8Z






28 Oct 2014

இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்

21 Sep 2014

மகாளய அமாவாசை -பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு

21 Jul 2014

அற்புத பலன் தரும் ஆடி அமாவாசை

24 Sep 2013

மகிமை நிறைந்த மகாளய அமாவாசை

08 Jun 2013

திருமலையில் மூன்று நாட்களில் 2.5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

23 Apr 2013

மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்

17 Apr 2013

ஆன்மீக செய்திகள்

11 Apr 2013

சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் நடை 10 மணி நேரம் அடைக்கப்படும்

07 Apr 2013

அகஸ்தீஸ்வரர் கோவிலில் லிங்கம் மீது சூரியஒளி விழும் அதிசயம்

25 Mar 2013

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு