tamilkurinji logo


 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழா தொடங்கியது,Tiruchendur murugan temple

Tiruchendur,murugan,temple




திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழா தொடங்கியது

First Published : Wednesday , 5th September 2012 06:35:35 PM
Last Updated : Wednesday , 5th September 2012 06:35:35 PM


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழா தொடங்கியது,Tiruchendur murugan temple

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-வது படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. இந்த கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஆவணி திருவிழாவும் ஒன்று.

இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 16-ந் தேதி வரை தொடர்ந்து 12 நாட்கள் விழா நடைபெறுகிறது.

கொடியேற்றத்தையொட்டி நேற்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.

அதிகாலை 4 மணிக்கு கொடிப்பட்டம் கோவிலில் இருந்து வீதி உலாவாக எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் கோவிலை வந்தடைந்தது. பின்னர் கொடிப்பட்டத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. காலை 5.15 மணிக்கு கோவில் 2-ம் பிரகாரத்தில் உள்ள செப்பு கொடிமரத்தில், ஆவணி திருவிழா கொடி ஏற்றப்பட்டது.

பின்னர் கொடி மர பீடத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. வண்ண மலர்கள், பட்டாடைகள் போன்றவற்றால் கொடி மரம் அலங்கரிக்கப்பட்டது. 6.20 மணிக்கு சோடச தீபாராதனை நடந்தது. அப்போது திரிசுதந்திரர்கள் வேத பாராயணம் பாடினர். ஓதுவார்கள் தேவாரம், திருப்புகழ் பாடினர். பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கொடியேற்றத்தை கண்டு தரிசித்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

10-ம் நாள் (14-ந் தேதி) காலை 7 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் தேரோட்டம் நடைபெறும்.

விழா நாட்களில் தினமும் பக்தி பொற்பொழிவு, பக்தி இன்னிசை, பட்டிமன்றம், திருமுறை இன்னிசை, கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழா தொடங்கியது,Tiruchendur murugan temple திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழா தொடங்கியது,Tiruchendur murugan temple திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழா தொடங்கியது,Tiruchendur murugan temple
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.திருச்செந்தூர் முருகன் கோயிலின் தலபுராணப்படி, சூரபத்மனை முருகப் பெருமான் வதம் செய்த இடம் என்பதால்

மேலும்...

 மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்
மதுரை சித்திரை திருவிழாவில் வேதமந்திரங்கள் முழங்க மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நேற்று கோலாகலமாக நடந்தது. இன்று காலை நான்கு மாசிவீதிகளில் தோரோட்டம் நடைபெறுகிறது.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்.14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று  முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணத்திற்காக

மேலும்...

 சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் நடை 10 மணி நேரம் அடைக்கப்படும்
சந்திர கிரகணத்தை முன்னிட்டு வரும் 25ம் தேதி 10 மணி நேரம் ஏழுமலையான் கோயில் நடை  மூடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.திருப்பதி திருமலை தேவஸ்தானம் மற்றும் ஏராளமான கோயில்களில் சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் நடக்கும்போது கோயில் நடை சாத்தப்படுவது

மேலும்...

 அகஸ்தீஸ்வரர் கோவிலில் லிங்கம் மீது சூரியஒளி விழும் அதிசயம்
விண்ணம்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவிலில் லிங்கம் மீது சூரிய ஒளி விழுந்தது. அப்போது பக்தர்கள் ‘நமச்சிவாய’ என்று கோஷமிட்டனர்.வேலூர் மாவட்டம், சேர்க்காடு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கும், வள்ளிமலை கோவிலுக்கும் மத்தியில் அமைந்துள்ளது விண்ணம்பள்ளி கிராமம். இந்த கிராமத்தில் தான் 12–வது நூற்றாண்டில் சோழர் காலத்தில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in