tamilkurinji logo


 

திருச்செந்தூரில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது,




திருச்செந்தூரில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

First Published : Sunday , 29th August 2010 09:10:49 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

திருச்செந்தூரில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடக்கும் விழாக்களில் ஆவணி மாத விழா பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு ஆவணி திரு விழா, கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து காலை 4 மணிக்கு பல்லக்கில் கொடி பட்டம் வைத்து 9 சன்னதிகள் வழியாக வந்து கோயிலுக்கு கொண்டு வந்தனர்.

அங்கு கொடி பட்டத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் பக்தி கோஷம் முழங்க 5.15 மணிக்கு சுப்பிரமணிய சிவாச்சாரியார் கொடியேற்றினார். அதன்பின், கொடி பீடத்துக்கு 16 வகை சிறப்பு அபிஷேகம் நடந்ததும் தர்ப்பைபுல், பட்டாடை, வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டது.

பின்னர் வேதமந்திரம் முழங்க மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து 4 வகை வேதங்கள், பஞ்சாங்கம், அத்தியானம், கட்டியம் கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து தேவாரம், திருப்புகழ் பாடினர்.

ஆவணி திருவிழா 12 நாட்கள் நடக்கிறது. செப்டம்பர் 7&ம் தேதி காலை 5 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

திருச்செந்தூரில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது, திருச்செந்தூரில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது, திருச்செந்தூரில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.திருச்செந்தூர் முருகன் கோயிலின் தலபுராணப்படி, சூரபத்மனை முருகப் பெருமான் வதம் செய்த இடம் என்பதால்

மேலும்...

 மகாளய அமாவாசை -பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு
ஒவ்வொரு புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும்  புனிதமான அமாவாசை ஆகும். தட்சனாயத்தில் வரும் முதல் அமாவாசையான  ஆடி அமாவாசை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதைவிட பல மடங்கு முக்கியத்துவம் பெறும் அமாவாசை புரட்டாசி அமாவாசை ஆகும். இந்த அமாவாசை நாள்

மேலும்...

 அற்புத பலன் தரும் ஆடி அமாவாசை
மதாந்தோறும் வரும் அமாவாசை தினமானது இறந்த நமது முன்னோர்களுக்கு  விரதம் இருக்க ஏற்ற நாளாகும்இவற்றில் ஆடி அமாவாசை தை அமாவாசை மகாளய அமாவாசை  முக்கியமானவை.  முன்றில் ஆடி அமாவாசை மிகவும் விசேஷமானது.ஆடி மாதத்தில் (தமிழ் மாதம்) கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்;

மேலும்...

 மகிமை நிறைந்த மகாளய அமாவாசை
சூரியன் கன்னி ராசிக்குள் செல்லும்போது, அதாவது புரட்டாசி மாதம், எமதர்மராஜன் பிதுர்க்களை பூமிக்கு அனுப்புவதாக ஐதீகம். அந்த நேரத்தில் நமது முன்னோர்களும் இறந்து போன ரத்தசம்பந்த உறவுகளும் அந்தந்த உறவினரைகுடும்பத்தினரை காண ஆசையுடனும், மகிழ்ச்சியுடனும் நம்மை காணவருவார்கள். அந்த நேரத்தில் அவர்களை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in