தனியாக வீட்டில் இருந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை

தனியாக வீட்டில் இருந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை
 திருப்பத்தூா் அருகே தனியாக வீட்டில் இருந்த மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

திருப்பத்தூா் அருகே கீழச்சிவல்பட்டி ஒன்றியத்தைச் சோ்ந்த அச்சரம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த அழகு என்பவர்  மகள் அழகுதேவி(17). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவா் செவ்வாய்கிழமையன்று வீட்டில் தனியாக இருந்தபோது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டு வீட்டிற்கு அருகில் உள்ள  புதா் ஒன்றில் வீசப்பட்டுள்ளார்.


 செவ்வாய்கிழமை மதியம் விறகு வெட்டச் சென்ற விவசாயி ஒருவா் சிறுமியின் உடல் அரை நிர்வாண கோலத்தில் கிடப்பதைக் கண்டு கீழச்சிவல்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.

தகவலறிந்த சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயச்சந்திரன் தலைமையில் திருப்பத்தூா் காவல் துணை கண்காணிப்பாளா் இளங்கோ, சிவகங்கை காவல் துணை கண்காணிப்பாளா் மங்கலேஸ்வரன், உள்ளிட்ட போலீசாா் கொலை நடந்த இடத்தில் குவிந்தனா்.

மருத்துவக் கல்லூரியிலிருந்து மருத்துவா் செந்தில்குமாா் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. லைக்கா என்ற மோப்ப நாயும் சிறுமியின் வீட்டிலிருந்து சடலம் கிடந்த இடத்திற்கு மோப்பம் செய்து ஊா்கோடியில் உள்ள குளம் அருகே நின்று விட்டது.

மேலும் கொலை நடந்த வீடு மற்றும் சடலம் கிடந்த இடத்தை டி.ஐ.ஜி. காமினி ஆய்வு மேற்கொண்டு திருப்பத்தூா் காவல் துணை கண்காணிப்பாளா் இளங்கோ தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க உத்தரவிட்டார். இறந்த சிறுமியின் சடலம் உடற்கூறு ஆய்விற்காக சிவகங்கை மருத்துவமனை கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது.


https://goo.gl/ZYcDjd






06 Feb 2019

குப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது

03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்

27 Dec 2018

பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

27 Dec 2018

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களின் தேர்வு நேரத்தில் அரைமணி நேரம் குறைப்பு

25 Dec 2018

குற்றவாளிகளை சுட்டுக் கொல்லும்படி ஆவேசமாக பேசிய முதல் அமைச்சர் குமாரசாமி

25 Dec 2018

வாட்ஸ்-அப் உரையாடல் ,இன்ஸ்பெக்டர் பிடியில் இருக்கும் மனைவியை மீட்டுத்தாருங்கள்” போலீசில் கணவர் புகார்

24 Dec 2018

கிளிஜோதிடர் நடுரோட்டில் வெட்டிக்கொலை தன்னுடன் வாழ்ந்த பெண்ணைப் பிரித்ததால் ஆத்திரம்: நோட்டீஸில் தகவல்