தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் சபரிமலை படிக்கட்டு போன்றவர்கள்; டி.டி.வி. தினகரன்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் சபரிமலை படிக்கட்டு போன்றவர்கள்; டி.டி.வி. தினகரன்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்ற டி.டி.வி. தினகரன் அதன்பின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார்.  அதற்கான கொடியையும் அறிமுகப்படுத்தினார்.

அவருக்கு ஆதரவாக செயல்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.  இந்த நிலையில் சட்டசபை நிகழ்ச்சிகளில் தினகரன் தனியாளாக சென்று பங்கேற்று வந்தார்.

அவர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் சபரிமலை படிக்கட்டு போன்றவர்கள்.  அவர்கள் எங்களுடனேயே இருப்பார்கள் என கூறினார்.

திவாகரன் கட்சி தொடங்குவது பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், திவாகரன் கட்சி ஆரம்பிப்பது பற்றி எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.  கட்சி என்பது வேறு.  உறவு என்பது வேறு என கூறினார்.

தனியார் தொலைக்காட்சி சேனல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தது பற்றி அவர் கூறும்பொழுது, அற்பர்களுக்கு வாழ்வு வந்தால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.  யார் மீது வேண்டுமானாலும் வழக்கு போடுவார்கள் என கூறியுள்ளார்.

இதேபோன்று தி.மு.க.வுடன் அ.ம.மு.க. கூட்டணி வைப்பதற்கு எங்களது கட்சியின் தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.
https://goo.gl/KTU1Wx


18 Dec 2018

வீடு கட்ட லஞ்சம் கொடுக்க வேண்டுமா?- அதிகாரியிடம் போனில் பேசிய கமல்

14 Dec 2018

நான் உழைத்து முதல்வரானேன்: நீங்கள் அப்பாவின் தயவால் உயர்ந்துள்ளீர்கள்: ஸ்டாலின்மீது எடப்பாடி பாய்ச்சல்

14 Dec 2018

புயலால் 8 மீட்டர் வரை அலை எழும்பும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

14 Dec 2018

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்

13 Dec 2018

பள்ளியில் 5 மாணவிகள் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி

13 Dec 2018

கழிவறை கேட்டு தந்தை மீது புகார் தந்த 7 வயது சிறுமி.. ஆம்பூர் தூய்மை இந்தியா தூதுவரானார்

13 Dec 2018

காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் : வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு

13 Dec 2018

தினகரனை தவிர பிரிந்து சென்றவர்கள் யார் வேண்டுமானாலும் திரும்பி வரலாம் - முதல்வர் பகிரங்க அழைப்பு

11 Dec 2018

குடும்ப வறுமையில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை

11 Dec 2018

கூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு: கல்லூரி மாணவி பரிதாப மரணம்