tamilkurinji logo


 

சேலத்தில் மழை நீரில் அடித்து செல்லப்பட்ட மாணவன் உடல் மீட்பு,salem heavy raintamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

salem,heavy,raintamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> தமிழகம்

சேலத்தில் மழை நீரில் அடித்து செல்லப்பட்ட மாணவன் உடல் மீட்பு

First Published : Tuesday , 3rd July 2018 11:44:55 AM
Last Updated : Tuesday , 3rd July 2018 11:44:55 AM


சேலத்தில் மழை நீரில் அடித்து செல்லப்பட்ட மாணவன் உடல் மீட்பு,salem heavy raintamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மழையின் போது பயங்கர காற்று வீசியதால் சில இடங்களில் மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன. சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக இடைவிடாமல் கனமழை கொட்டித்தீர்த்தது. பின்னர் விடிய, விடிய மழை விட்டு, விட்டு பெய்து கொண்டே இருந்தது.கனமழை காரணமாக சேலத்தில் பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஒடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது.

சேலம் நாராயண நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் முகமது ஆஷாத் (வயது 16). எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தான். நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் 3 பேருடன் சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்பினான்.

வீடு அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக ஓடையில் முகமது ஆஷாத் தவறி விழுந்தான். அவரை நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை. முகமது ஆஷாத் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டான்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் மாணவனின் பெற்றோர், உறவினர்கள் விரைந்து சென்று தேடி பார்த்தனர். சம்பவ இடத்துக்கு கிச்சிப்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடனே சென்று மாணவனை தேடினர்.

தண்ணீர் அதிகமாக சென்றதால் மாணவனை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து மாணவனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. 24 மணி நேரமாக நடைபெற்று வந்த தேடுதல் வேட்டையில், இன்று காலை கருவாட்டுப் பாலத்தில் சிறுவன் முகம்மது ஆசாத்  சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

சேலத்தில் மழை நீரில் அடித்து செல்லப்பட்ட மாணவன் உடல் மீட்பு,salem heavy raintamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema சேலத்தில் மழை நீரில் அடித்து செல்லப்பட்ட மாணவன் உடல் மீட்பு,salem heavy raintamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema சேலத்தில் மழை நீரில் அடித்து செல்லப்பட்ட மாணவன் உடல் மீட்பு,salem heavy raintamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வட தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
வட தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் கடந்த மூன்று தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில்

மேலும்...

 பள்ளி மாணவனை திருமணம் செய்த கல்லூரி மாணவி கைது
திருவண்ணாமலை மாவட்டம் கெங்கல மகாதேவி பகுதியை சேர்ந்த இளம்பெண் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னுடைய மகளை மீட்டுத் தருமாறும் இளம்பெண்ணின் பெற்றோர் திருவண்ணாமலை

மேலும்...

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
தமிழகம் மற்றம் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாகவே பரவலாக லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அடுத்து வரும் தினங்களிலும் வட

மேலும்...

 நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் அபாயம்
நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை நிலவுவதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் நிலக்கரி பற்றாக்குறைக்கு தமிழக அரசின் கமிஷன் பெறும் உள்நோக்கம் காரணமாக இருக்கலாம் என்று

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in