சென்னையில் 7- வது மாடியிலிருந்து தவறி விழுந்து குழந்தை பலி

சென்னையில்  7- வது மாடியிலிருந்து தவறி விழுந்து குழந்தை பலி
சென்னை சூளைமேட்டில் தாயின் அஜாக்கிரதை காரணமாக அடுக்குமாடி குடியிருப்பின் 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்த 4 வயது பெண் குழந்தை பலியானது.

சென்னை சூளைமேட்டில் சித்ரா அவென்யூவில் மஞ்சு பிளாட் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 6 அடுக்குகளும், 7- வதாக மொட்டைமாடியும் இந்த கட்டடத்தில் உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனியார் நிறுவனத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றுபவர் கோபால் (60).

இவர் நேபாளத்தைச் சேர்ந்தவர். இவருடைய மனைவி கீதா(34). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். 4 வயதில் சாரதா என்ற பெண் குழந்தையும், ஒரு கைக்குழந்தையும் உள்ளனர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்ப்பதால் அந்த நிறுவனம் அமைந்துள்ள மஞ்சு அபார்ட்மெண்டிலேயே கோபால் குடும்பம் வசிக்க மொட்டை மாடியில் சிறிய அறை ஏற்படுத்தி தந்துள்ளனர்.

குழந்தை சாரதா அருகில் உள்ள பள்ளியில் யூகேஜி படித்து வந்தார். நேற்றிரவு பள்ளி சென்றுவிட்டு மாலை வீட்டுக்கு வந்த சாரதா, வீட்டுப்பாடங்களை முடித்துவிட்டு அப்படியே படுத்து தூங்கிவிட்டார். அப்போது வீட்டின் விளக்கை அணைத்துவிட்டு தாயார் கீதா கைக்குழந்தையை தூக்கிக்கொண்டு கீழே 6 வது தளத்தில் உள்ள வீட்டில் போய் பேசிக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது இரவு 8 மணி அளவில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை சாரதா திடீரென கண் விழித்துள்ளார். வீட்டில் யாருமில்லை என்றவுடன் இரவு நேரம் என்பதால் பயந்துபோய் அழுதுள்ளார். அம்மாவைத் தேடி வேகமாக அழுதபடி பால்கனி நோக்கி வந்துள்ளார். அந்த பால்கனி கம்பியால் ஆனது.

சாதாரணமாக குழந்தைகள் அதன் வழியாக எட்டிப்பார்க்க முடியும். அவ்வாறு அம்மாவை தேடி பால்கனி வழியாக எட்டிப்பார்த்த குழந்தை சாரதா எதிர்பாராத விதமாக தவறி விழுந்துள்ளார். ஏழாவது மாடியிலிருந்து கீழே விழுந்ததில் பலத்த காயத்துடன் கீழே கிடந்துள்ளார்.

குழந்தை மேலிருந்து கீழே விழுந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த கீதாவும், அக்கம்பக்கத்தில் இருந்தவர்களும் அலறி அடித்து கீழே ஓடி வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தை சாரதாவை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சாரதாவின் உடல்நிலை மோசமாக இருக்கவே மேல் சிகிச்சைக்காக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் குழந்தை சாரதா பலியானார். இதையடுத்து உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாயின் அஜாக்கிரதையால், குழந்தை 7-வது மாடியில் இருந்து விழுந்து பலியான சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

https://goo.gl/EAj28b






17 Mar 2019

2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

06 Mar 2019

தேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி

06 Mar 2019

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு

19 Feb 2019

குடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை

19 Feb 2019

அ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி

06 Feb 2019

குப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது

03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்