tamilkurinji logo
 

சென்னையில் தடையை மீறி கல்லூரி மாணவர்கள் பேருந்து தின கொண்டாட்டம்,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> தமிழகம்

சென்னையில் தடையை மீறி கல்லூரி மாணவர்கள் பேருந்து தின கொண்டாட்டம்

First Published : Friday , 16th June 2017 12:51:07 PM
Last Updated : Friday , 16th June 2017 12:51:19 PM


சென்னையில் தடையை மீறி கல்லூரி மாணவர்கள் பேருந்து தின கொண்டாட்டம்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் தடையை மீறி பேருந்து தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.

இன்று காலை சென்னை திருவல்லிக்கேணியில் 27-எச் (27-H) என்ற பேருந்தில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் பேருந்து தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்துக்கு மாலை அணிவித்தும் பேனர் கட்டியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

 அதுமட்டுமல்லாமல் இருச்சக்கர வாகனங்களில் பாரதி சாலை வழியாக மாநிலக் கல்லூரி வரைக்கும் பேரணியாகச் சென்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸார் மாணவர்களை தடுத்து நிறுத்தியும்கூட அவர்கள் தொடர்ந்து பேரணியாகச் சென்றனர். பேருந்தின் மீது ஏறி நின்றும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் படிக்கும் கல்லூரி மாணவர்களில் சிலர் குழுவாக சேர்ந்து ஆண்டுதோறும் பேருந்து தினம் கொண்டாடி வருகின்றனர். இந்த கொண்டாட்டத்தின்போது ஆட்டம் ஆடி, பாடல் பாடி சாலையில் பட்டாசு வெடித்து உற்சாகத்தை காட்டுகின்றனர்.

இதுபோன்ற கொண்டாட்டம் சில இடங்களில் வன்முறையாக மாறி விடுகிறது. எனவே இதுபோன்ற கொண்டாடங்களுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. தடையை மீறும் மாணவர்களை கைது செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் தடையை மீறியும் மாநிலக் கல்லூரி மாணவர்கள் பேருந்து தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.


சென்னையில் தடையை மீறி கல்லூரி மாணவர்கள் பேருந்து தின கொண்டாட்டம்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

சென்னையில் தடையை மீறி கல்லூரி மாணவர்கள் பேருந்து தின கொண்டாட்டம்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

சென்னையில் தடையை மீறி கல்லூரி மாணவர்கள் பேருந்து தின கொண்டாட்டம்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மத்திய, மாநில அரசின் நீட் துரோகத்தை தமிழகம் மன்னிக்காது :மு.க ஸ்டாலின்
மத்திய, மாநில அரசின் நீட் துரோகத்தை தமிழகம் மன்னிக்காது :மு.க ஸ்டாலின்மத்திய, மாநில அரசுகளின் நீட் துரோகத்தை தமிழகம் மன்னிக்காது என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அறிக்கைவிடுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:மத்திய, மாநில அரசுகளின் நீட் துரோகத்தை தமிழகம்

மேலும்...

 நீட் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்பது கடமை- துணை சபாநாயகர் தம்பிதுரை .
நீட் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.நீட் தேர்வு அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். செப்டம்பர் 4-ம் தேதிக்குள் மருத்துவக் கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும்

மேலும்...

 நீட் அடிப்படையில் தான் மருத்துவ மாணவர் சேர்க்கை - தமிழகத்திற்கு விலக்கு இல்லை: நீதிமன்றம் உத்தரவு
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் அவசர சட்ட வரைவை தமிழக அரசு மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. இதற்கு அனுமதி அளிக்கலாம் என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கருத்து தெரிவித்ததையடுத்து 3 அமைச்சகங்கள் ஒப்புதலும்

மேலும்...

 தமிழ்நாடு முழுவதும் 12 லட்சம் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம்
தமிழ்நாடு முழுவதும் இன்று 12 லட்சம் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதிக்குபின் புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் 5 லட்சம் தமிழக அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் இணைக்கப்பட்டு உள்ளனர். இதற்காக மாதந்தோறும்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in