சில பள்ளிகளால் பெற்றோர் குழப்பம் முப்பருவ பாடத்திட்டத்தில் ஆண்டு இறுதித்தேர்வு எப்படி?

சில பள்ளிகளால் பெற்றோர் குழப்பம் முப்பருவ பாடத்திட்டத்தில் ஆண்டு இறுதித்தேர்வு எப்படி?
தமிழகத்தில் சமச்சீர் கல்வித் திட்டம் அமலில் உள்ள நிலையில் மாணவர்களின் கல்விச் சுமை மற்றும் நோட்டுப் புத்தக சுமைகளை குறைக்க முப்பருவ பாடத்திட்டம் நடப்பு கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டு பாடங்களை மூன்று பருவங்களாகப் பிரித்து ஒவ்வொரு பருவத்திற்கும் தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு பருவத்திற்கும் தனித்தனியாக பாடபுத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை நடத்தப்பட்ட 2 பருவ தேர்வுகளிலும் அதற்குரிய பாடத்திட்டங்களே எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மூன்றாம் பருவத்திற்கான தேர்வு ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது. ஆண்டு இறுதித் தேர்வான இந்த தேர்வை நடத்தும் சில பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு முழு பாடத்திட்டங்களையும் கற்று வரவேண்டும், அதற்கேற்ப கேள்விகள் கேட்கப்படும் என வாய்மொழியாக அறிவித்துள்ளதாக பெற்றோர்கள் கூறுகின்றனர். சில பள்ளிகள் முழு ஆண்டுக்கான பாடத்திட்டங்களையும் தொகுத்து மாணவர்களுக்கு வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து கல்வித் துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:அரசு அறிவித்தப்படி பள்ளிகளில் முப்பருவ பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள ஆண்டு இறுதித் தேர்வுகளை நடத்த வேண்டும். முதல் மற்றும் 2ம் பருவ பாடத் திட்டங்கள் முடிக்கப்பட்டு விட்டன. இனிமேல் அதிலிருந்து கேள்வி கேட்க கூடாது. அரசு உத்தரவை எல்லா பள்ளிகளும் கடுமையாக கடைபிடிக்க வேண்டும். இதை யாராவது மீறுவதாக புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
https://goo.gl/2V3SR6


05 Nov 2013

குழந்தைகளுக்கு படிப்பு வரவில்லையா?

04 Jun 2013

பொறியியல் கலந்தாய்வுக்கான ரேண்டம் நம்பர் வெளியீடு

03 May 2013

பொறியியல் சேர்க்கை விண்ணப்பங்கள் இன்று முதல் விநியோகம்

28 Apr 2013

டெல்லி பல்கலையில் சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

22 Apr 2013

பொறியியல் விண்ணாப்பங்கள் மே 4 முதல் வினியோகம்

25 Mar 2013

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது

19 Mar 2013

சில பள்ளிகளால் பெற்றோர் குழப்பம் முப்பருவ பாடத்திட்டத்தில் ஆண்டு இறுதித்தேர்வு எப்படி?

20 Feb 2013

ஆன்லைனில் செய்முறை பயிற்சி: சிபிஎஸ்இ அறிமுகம்

18 Feb 2013

நாளை பொது வேலைநிறுத்தம்: 10-ம் வகுப்பு செய்முறைத்தேர்வில் மாற்றம் இல்லை

11 Feb 2013

பிளஸ் 2 தேர்வை கண்காணிக்க 5000 பேர் கொண்ட பறக்கும் படை தயார்