tamilkurinji logo


 

சிறையிலிருந்து ஜாமினில் வந்த பிரபல ரவுடி பினு தலைமறைவு,tamil news india news

tamil,news,india,news




செய்திகள் >>> தமிழகம்

சிறையிலிருந்து ஜாமினில் வந்த பிரபல ரவுடி பினு தலைமறைவு

First Published : Monday , 2nd July 2018 02:11:16 PM
Last Updated : Monday , 2nd July 2018 02:11:16 PM


சிறையிலிருந்து ஜாமினில் வந்த பிரபல ரவுடி பினு தலைமறைவு,tamil news india news

சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த ரவுடி பினு தலைமறைவாக உள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 23-ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் பினுவை ஜாமினில் விடுவித்திருந்தது. ஜாமின் நிபந்தனைப்படி காவல்நிலையத்தில் கையெழுத்திடாமல் பினு தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது,

சிறையிலிருந்து வந்தது முதல் இன்று வரை மாங்காடு காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட பினு வரவில்லை என போலீஸார் கூறியுள்ளனர்.


ரவுடி பினு காவல்நிலையத்தில் கடந்த ஒரு மாதமாக கையெழுத்திடவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பத்தூர் போலீஸிடம் சரணடைந்த பினு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த சில மாஙத்களுக்கு முன்னதாக பூவிருந்தவல்லி அருகே மலையம்பாக்கத்தில் ரவுடி கும்பல் ஒன்று பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது, பிப்ரவரி 6-ல் இரவு கொண்டாட்டத்தில் கூடிய 75 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.


ரவுடி கூட்டத்தின் தலைவர் பினு போலீஸ் பிடியில் இருந்து தப்பினார். தப்பியோடிய பினு மற்றும் கூட்டாளிகள் 100 பேரை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் நோக்கமே பிரபல ரவுடி ராதா கிருஷ்ணனை ஒழிக்க வேண்டும் என்பது தான் என கூறப்பட்டது.

கடந்த சில நாட்களாக சென்னையில் ஓய்ந்திருந்த ரவுடிகள் மோதல் தற்போது மீண்டும் தலை தூக்க தொடங்கியதை அடுத்து, தப்பியோடிய பினு மற்றும் கூட்டாளிகளை தேவைப்பட்டால் சுட்டு பிடிக்கவும் போலீசார் திட்டமிட்டனர்.

இந்நிலையில் ரவுடி பினு  சென்னை அம்பத்தூர் போலீசில் சரணடைந்தான். இந்நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ரவுடி பினு, தற்போது நிபந்தனை ஜாமின் படி செயல்படாமல் தப்பியோடியுள்ளது காவல்துறை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது,

சிறையிலிருந்து ஜாமினில் வந்த பிரபல ரவுடி பினு தலைமறைவு,tamil news india news சிறையிலிருந்து ஜாமினில் வந்த பிரபல ரவுடி பினு தலைமறைவு,tamil news india news சிறையிலிருந்து ஜாமினில் வந்த பிரபல ரவுடி பினு தலைமறைவு,tamil news india news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கர்ப்பிணி பெண்ணை கொலைசெய்து நாடகமாடிய கணவன் கைது
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அருகே உள்ள அருதங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 38). இவரது மனைவி புஷ்பா (28). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு பெனித்தா (2) என்ற பெண் குழந்தை உள்ளது. தற்போது புஷ்பா 5

மேலும்...

 திருமணமான 5 நாளில் கணவரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய இளம்பெண்
மற்ற பெண்களுடன் உள்ள தொடர்பை மறைத்துத் திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரமடைந்த மனைவி, கணவனை பட்டப்பகலில் கோயில் வளாகத்தில் வைத்துத் தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.கோவை சாய்பாபா கோயிலுக்கு நேற்று சாமி தரிசனம் செய்ய புதுமணத் தம்பதிகள் வந்தனர். அப்போது

மேலும்...

 11 வயது மாணவிக்கு போதை ஊசி போட்டு பாலியல் பலாத்காரம் செய்த 17 பேர் கைது
சென்னையில் 11 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டனர்.சென்னை அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலையில், பிரபல அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தான் 11 வயது சிறுமியை கற்பழித்த கொடூர காட்சிகள் அரங்கேறியுள்ளது.11 வயது,

மேலும்...

 சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயது சிறுமியை மிரட்டி 7 மாதமாக பாலியல் தொந்தரவு; முதியவர்கள் 6 பேர் உட்பட 18 பேர் கைது
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயது சிறுமியை மிரட்டி 7 மாதமாக பாலியல் தொந்தரவு செய்த முதியவர்கள் 6 பேர் உட்பட 18 பேரை போலீஸார் கைது செய்தனர்.சென்னை அயனாவரத்தில் பிரபலமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in